உள்ளடக்கத்துக்குச் செல்

மகபூப்நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகபூப்நகர், இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள மகபூப்நகர் மாவட்டத்தின் தலைநகரம். இங்கு உள்ளோர் தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். இது பலமூர் எனவும் அழைக்கப்படுகிறது. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 3,513,934 ஆகும். இம்மாவட்டம் முன்பு நிஜாம்களின் ஆட்சியில் இருந்தது. நிஜாம் ஆட்சியின்போது இது ஹைதராபாத் மாநிலத்தின் தென்மாவட்டமாக இருந்தது. தெற்கில் கிருஷ்ணா ஆறு பாய்கிறது. நல்கொண்டா, ஹைதராபாத், கர்நூல், ராய்ச்சூர், குல்பர்கா ஆகியவை இதன் அண்டை மாவட்டங்கள் ஆகும்.

வரலாறு

[தொகு]

முற்காலத்தில் இப்பகுதியானது "ருக்மம்மாபேட்டை" எனவும் "பலமூரு" எனவும் அழைக்கப்பட்டது. இதன் பெயர் ஆனது 1890 டிசம்பர் 4-இல் அப்போது நிஜாமாக இருந்த மகபூப் அலி கான் என்பவரின் நினைவாக மகபூப் நகர் என்று பெயரிடப்பட்டது. முன்பொரு காலத்தில் இது சோழர்களின் நிலம் எனப்பொருள்படும் சோழவாடி என அழைக்கப்பட்டது.

படக்காட்சியகம்

[தொகு]

File:Office of District Educational Officer, Mahabubnagar.jpg|மகபூப்நகர், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் File:Govt. College of Teacher Education, Mahabubnagar.jpg|மகபூப்நகர், அரசு ஆரிரியக் கல்வி கல்லூரி </Gallery>

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகபூப்நகர்&oldid=2923040" இலிருந்து மீள்விக்கப்பட்டது