ராஜன்னா சிர்சில்லா மாவட்டம்
ராசன்னா சிர்சில்லா மாவட்டம் (Rajanna Sircilla district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]கரீம்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் 11 அக்டோபர் 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது.[2] இம்மாவட்டத்தின் தலைமையிடமான சிர்சில்லா நகரம் விசைத்தறிக்கூடங்கள் அதிகம் கொண்டது.
புவியியல்
[தொகு]2019 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இம்மாவட்டத்தைச் சுற்றி கரீம்நகர் மாவட்டம், காமாரெட்டி மாவட்டம், மற்றும் சித்திபேட்டை மாவட்டங்கள் உள்ளது. கோதாவரி ஆற்றின் துணை ஆறான மனேரு ஆறு இம்மாவட்டத்தின் வழியாக பாய்கிறது. .
மக்கள் தொகையியல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 2030.89 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 5,46,121 ஆகும். இம்மாவட்டத்தின் சராசரி எழுத்தறிவு 62.71% ஆகவும், பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1014 வீதம் உள்ளனர். இம்மாவட்டத்தின் வாகனப் பதிவு எண் TS–23 ஆகும்.[3]
அரசியல்
[தொகு]இம்மாவட்டம், சிர்சில்லா, வெமுலவாடா, சோப்பதண்டி மற்றும் மனகொண்டூர் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்டம் கரீம்நகர் மக்களவைத் தொகுதியில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் சிர்சில்லா எனும் ஒரு வருவாய் கோட்டமும், 13 வருவாய் வட்டங்களையும் கொண்டது.[4] இம்மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஆட்சியர் டி. கிருட்டிண பாசுகர் ஆவார்.[5]
மாவட்டத்தின் பிற தகவல்கள்
[தொகு]இம்மாவட்டத்தின் வெமுலவாடா நகரத்தில் பண்டைய கோயிலான இராசராசசுவரி கோயில் அமைந்துள்ளது. வெமுலவாடா அருகே நம்பள்ளி எனுமிடத்தில் இலக்குமி நரசிம்மர் கோயில் உள்ளது.
கி பி 750 - 973 காலத்தில் ஆண்ட வெமுலவாடா சாளுக்கியர்களின் பாறை கல்வெட்டுகள் வெமுலவாடா பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016.
- ↑ "Rajanna district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 15 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016.
- ↑ "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
- ↑ "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2017-05-15 at the வந்தவழி இயந்திரம்