நாராயணன்பேட்டை மாவட்டம்
தோற்றம்
நாராயணன்பேட்டை
నారాయణపేట (தெலுங்கு) | |
|---|---|
மாகனூர் அருகே கிருட்டிணா ஆற்றங்கரையில் வயல்வெளிகள் | |
தெலங்காணாவில் அமைவிடம் | |
| ஆள்கூறுகள் (நாராயணன்பேட்டை): 16°44′48″N 77°29′45″E / 16.746688°N 77.495815°E | |
| நாடு | |
| பகுதி | தென்னிந்தியா |
| மாநிலம் | |
| மாவட்ட உருவாக்கம் | 17 பெப்ரவரி 2019 |
| தோற்றுவித்தவர் | க. சந்திரசேகர் ராவ் |
| தலைமையகம் | நாராயணன்பேட்டை |
| மண்டலங்கள் | 11 |
| அரசு | |
| • மாவட்ட ஆட்சித் தலைவர் | ஹரி சந்தன தாசரி, இ.ஆ.ப. |
| • நாடாளுமன்ற தொகுதிகள் | மஹபூப்நகர் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 2,336 km2 (902 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 5,66,874 |
| • அடர்த்தி | 240/km2 (630/sq mi) |
| வாகனப் பதிவு | TS-38 [1] |
| இணையதளம் | narayanpet |
நாராயணன்பேட்டை மாவட்டம் (Narayanpet district) இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் 32-வது மாவட்டம் ஆகும். மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 17 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது.[2] இதன் நிர்வாகத் தலைமையிடம் நாராயணன்பேட்டை நகரம் ஆகும்.
நிர்வாக பிரிவுகள்
[தொகு]இம்மாவட்டம் நாராயணன்பேட்டை எனும் ஒரு வருவாய் கோட்டமும், 11 மண்டல்களும் கொண்டது.[3]
மண்டல்கள்
[தொகு]| # | நாராயணன்பேட்டை வருவாய் கோட்டம் |
|---|---|
| 1 | தமர்கிட்டா |
| 2 | தன்வாடா |
| 3 | கோஸ்கி |
| 4 | கிருஷ்ணா |
| 5 | மட்டூர் |
| 6 | மகனூர் |
| 7 | மக்தல் |
| 8 | மரிக்கல் |
| 9 | நாராயணன்பேட்டை |
| 10 | நர்வா |
| 11 | உத்குர் |
மக்கள்தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, நாராயண்பேட்டை மாவட்டத்தில் 5,66,874 மக்கள் தொகை இருந்தது, அவர்களில் 2,82,231 ஆண்கள் மற்றும் 2,84,643 பெண்கள். கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்களின் பாலின விகிதம் 1009.89%. பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகையில் முறையே 16.2% மற்றும் 5.1%.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Demography | Narayanpet District, Government of Telangana | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-09-15.
- ↑ "Telangana gets two new districts: Narayanpet and Mulugu". The New Indian Express. Archived from the original on 2021-11-04. Retrieved 2019-02-21.
- ↑ Telangana Govt Order No 19 Dt 16-02-2019

