காமாரெட்டி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
காமாரெட்டி மாவட்டம்
కామారెడ్డి జిల్లా
کاماریڈی ضلع
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தெலங்கானா
பிரதேசம்தக்கான பீடபூமி
நிறுவிய ஆண்டுஅக்டோபர், 2016
தலைமையிடம்காமாரெட்டி நகரம்
அரசு
 • நிர்வாகம்மாவட்ட ஆட்சியரகம்
பரப்பளவு
 • மொத்தம்3,652.00 km2 (1,410.05 sq mi)
பரப்பளவு தரவரிசை15
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்972,625
 • தரவரிசை15
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு, உருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTS–17[2]
இணையதளம்= kamareddy.telangana.gov.in
காமாரெட்டி மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள்

காமாரெட்டி மாவட்டம் (Kamareddy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3][4]தெலங்கானா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள நிசாமாபாத் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் காமாரெட்டி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காமாரெட்டி நகரம் ஆகும். காமாரெட்டி நகரத்தில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது.

புவியியல்[தொகு]

3,652 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[1] காமாரெட்டி மாவட்டத்தின் வடக்கில் நிசாமாபாத் மாவட்டம், கிழக்கில் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், தென்கிழக்கில் சித்திபேட்டை மாவட்டம், தெற்கில் சங்கர்ரெட்டி மாவட்டம் மற்றும் மேடக் மாவட்டங்களும், மேற்கில் மகாராட்டிரத்தின் நாந்தேட் மாவட்டம், தென்மேற்கில் கர்நாடகாவின் பீதர் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காமாரெட்டி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9,72,625 ஆகும்.[1][5] இம்மாவட்ட மக்கள் தெலுங்கு மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

காமாரெட்டி மாவட்டம், காமரெட்டி, பன்ஸ்வாடா மற்றும் எல்லரெட்டி என மூன்று வருவாய் கோட்டங்களையும், 22 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[1][6][7] இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் என். சத்தியநாராயனா ஆவார்.[8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  2. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016. 
  3. "Kamareddy district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 9 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "New districts map". newdistrictsformation.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-08. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  6. காமாரெட்டி மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களும், மண்டல்களும்
  7. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
  8. "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமாரெட்டி_மாவட்டம்&oldid=3928798" இலிருந்து மீள்விக்கப்பட்டது