சாதவாகனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாதவாகனப் பேரரசு
SatavahanaMap.jpg
சாதவாகனப் பேரரசின் எல்லைகளும் (தொடர்க் கோடு) கைப்பற்றிய பகுதிகளும் (புள்ளிக் கோடு).
ஆட்சி மொழிகள் மகாராஷ்ட்டிரி
சமஸ்கிருதம்
தெலுங்கு
தலைநகரங்கள் பைத்தான் (அவுரங்காபாத் மாவட்டம்), கோடி லிங்கம் (கரீம்நகர் மாவட்டம்), அமராவதி
அரசு முறை முடியாட்சி
முன்னிருந்தது மௌரியப் பேரரசு
பின்வந்தது இட்ச்வாகுகள், கடம்பர், மேற்கு சத்ரபதிகள்

சாதவாகனர் (Śātavāhana) (கிமு 230 - கிபி 220) என்போர், மகாராஷ்டிராவின் ஜுன்னார் (புனே), பிரதிஸ்தான், ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதி ஆகிய பகுதிகளிலிருந்து கிமு 230 தொடக்கம் கிபி 220 வரை தெற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளை ஆண்ட ஒரு அரச மரபினராவர். இம் மரபினரின் ஆட்சி முடிவுக்கு வந்த காலம் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்படினும், இது கிபி 200 வரை 450 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்ததாகக் கொள்ளப்படுகின்றது. மௌரியப் பேரரசின் பின்னர், வெளிநாட்டினரின் தாக்குதல்களை முறியடித்து, நாட்டில் அமைதியை நிலைநிறுத்தியதில் சாதவாகனரின் பங்கு முக்கியமானது. [1]


தோற்றம்[தொகு]

சாதவாகனர் பற்றிய முதலாவது குறிப்பு கிமு 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்ற ஐதரேய பிராமணத்தில் காணப்படுகின்றது. இவர்கள் விசுவாமித்திரரின் வழி வந்தவர்கள் என இப் பிராமணம் கூறுகின்றது. புராணங்களும், இவர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களும் இவர்களை சாதவாகனர், சதகர்ணிகள், ஆந்திரர், ஆந்திரபிரித்தியர் எனப் பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன. கிரேக்கப் பயணியான மெகஸ்தெனசின் ஒரு குறிப்பின்படி இவர்கள் 100,000 காலாட்படையும், 1,000 யானைகளும், 30 சிறப்பாக அமைக்கப்பட்டு அரண் செய்யப்பட்ட நகரங்களும் இருந்ததாகத் தெரிகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Satavahana Dynasty: Rulers, Administration, Society and Economic Conditions
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதவாகனர்&oldid=2124649" இருந்து மீள்விக்கப்பட்டது