மெகஸ்தெனஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெகஸ்தெனஸின் பயணம்

மெகஸ்தெனஸ் (மெகெஸ்தெனீஸ்) (Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் இண்டிகா என்னும் நூலை எழுதினார். ஆசியா மைனரில் பிறந்த இவர், பாடலிபுத்திரத்தில் இருந்த சந்திரகுப்த மௌரியனின் அரசவையில், செலுசிட் பேரரசர் செலுக்கஸ் நிகோடரின் தூதுவராக இருந்தார். இவர் அங்கு தூதுவராக இருந்த காலம் தெளிவாகத் தெரியாவிட்டாலும், இது சந்திரகுப்தன் இறந்த ஆண்டான கிமு 288 க்கு முன்னர் என வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.[1]

மெகஸ்தெனஸ் இந்தியாவில் பயணம் செய்த இடங்கள் பற்றிய குறிப்பான தகவல்கள் உள்ளன. பெண்டாபொட்டாமியா என்னும் மாவட்டத்தினூடாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ள இவர் அதன் ஆறுகள் பற்றியும் விரிவாக விவரித்துள்ளார். இது சிந்து நதியின் ஐந்து கிளை நதிகள் பாயும் பஞ்சாப் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இங்கிருந்து அரச பாட்டையூடாக அவர் பாடலிபுத்திரத்தை அடைந்துள்ளார். இவர் அக்காலத்தில் சிறந்து விளங்கிய பாண்டியர்களின் தலைநகரான மதுரைக்கும் சென்றதாகத் தெரிகிறது. எனினும், இந்தியாவின் வேறெந்த பகுதிகளுக்கும் அவர் சென்றதாகத் தகவல்கள் எதுவும் இல்லை. இவர் இந்தியாவில் கண்டவற்றை இந்திக்கா என்னும் அவரது படைப்பில் பதிவு செய்துள்ளார். இது பின்னர் வந்த பல எழுத்தாளருக்கு முக்கியமான மூல நூலாக விளங்கியது. இவர் இமயமலை, இலங்கைத் தீவு, இந்தியாவின் சாதி முறை என்பவை பற்றியும் விளக்கியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Megasthenes

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகஸ்தெனஸ்&oldid=3361552" இருந்து மீள்விக்கப்பட்டது