பிரமாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிராமணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தத்துவத்தில் பிரமாணங்கள் (Brāhmaṇa's, தேவநாகரி: ब्राह्मणम्) அல்லது அளவை என்பது ஏற்புடைய அறிவைப் (valid knowledge) பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளைக் குறிக்கின்றது. ஆறு வகையான இத்தகைய வழி முறைகளைப் பற்றி இந்திய தத்துவ நூல்கள் பேசுகின்றன.

பிரமாணங்கள் வேத மந்திரங்களுக்கான விளக்கவுரையுடன் எழுதப்பட்ட பகுதிகள் ஆகும். வேதங்களில் உள்ள துதிப்பாடல்களுக்குரிய உரைநடை நூல்கள் எனலாம். சமயச் சடங்குகள், வேள்விகள் பற்றிய விளக்கங்களும் அவற்றைச் செய்யும் முறைகளும் உள்ளன. புரோகிதர்களுக்கு சரியான வழியைக் காட்ட இவை பெரிதும் உதவுகின்றன.

ஆறு வழிமுறைகள்[தொகு]

  1. புலனுணர்வு - (பிரத்தியட்சம் - perception by the senses)
  2. உய்த்துணர்வு - (அநுமானம் - deduction or inference)
  3. உரைச்சான்று - (சப்தம் அல்லது ஆப்தவாக்கியம் - trustworthy testimony or revelation)
  4. ஒப்புநோக்கு - (உபமானம் - analogy or comparison)
  5. சூழ்நிலைசார் உய்த்துணர்வு - (அர்த்தாபத்தி - deduction or inference from circumstances)
  6. எதிர்மறைச் சான்று - (அனுபலப்தி - proof by the negative method)

எல்லாத் தத்துவப் பிரிவுகளுமே இந்த ஆறு முறைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. பல தத்துவப் பிரிவுகள் இவற்றுள் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொள்கின்றன. தத்துவப் பிரிவுகளிடையே வேறுபாடுகள் காணப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

புலனுணர்வு[தொகு]

புலனுணர்வு அல்லது பிரத்தியட்சம் என்பது நேரடியாகப் புலன்களினால் பார்த்து, கேட்டு, முகர்ந்து, தொட்டு அறிந்துகொள்வதைக் குறிக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமாணம்&oldid=1962402" இருந்து மீள்விக்கப்பட்டது