லக்குண்டி சமணக் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{building_name}}}
பிரம்ம ஜினாலயம்
பிரம்ம ஜினாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்லக்குண்டி, கதக் மாவட்டம், கர்நாடகா
சமயம்சமணம்

லக்குண்டி சமணக் கோயில் (The Jain Temple, Lakkundi) (ஜெயின் பசடி) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் கடக் மாவட்டத்திலுள்ள லக்குண்டி எனும் ஊரில் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில் ஆகும். இக்கோயிலை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தேசிய முக்கியத்தவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது.[1]

மேலைச் சாளுக்கியர் எனும் கல்யாணிச் சாளுக்கியர்களின் ஆட்சிக் காலத்தில், கிபி 11-12ஆம் நூற்றாண்டுகளில், மகாவீரருக்கு அர்ப்பணிக்க நிறுவப்பட்டது.

மேலைச் சாளுக்கியர்கள் 1191ல் வீழ்ச்சியடையத் துவங்கியபோது, ஹோய்சாள மன்னர் இரண்டாம் வீர வல்லாளன் லக்குண்டி ஊரை படைகளின் பாசறையாக மாற்றினார்.[2]

இக்கோயில் மேலைச் சாளுக்கிய கட்டிடக் கலைநயத்தில் நிறுவப்பட்டது. ஹொய்சாள மன்னர்கள் பின்னாளில் இக்கோயிலை ஹோய்சாளக் கட்டிடக் கலைநயத்தில் சீரமைத்தனர்.

இக்கோயிலின் வெளிப்புறத்தில் மகாவீரின் நான்கு அடி உயர கருங்கல் சிற்பம், சிங்காசனத்தில் உள்ளது. கோயிலின் உள்மண்டபத்தில் பிரம்மா மற்றும் சரசுவதி சிலைகளும் உள்ளது. மேலும் கஜலெட்சுமி சிலையும் உள்ளது. [3]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "Alphabetical List of Monuments - Karnataka -Dharwad, Dharwad Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. 7 April 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. Cousens (1926), p.77
  3. Cousens (1926), pp.78-79

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]