தில்லியின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா
தில்லி
பழைய தில்லி நகரத்தின் காட்சி
அமைவிடம் தில்லி
State established: கி மு 736
மொழிகள் கரிபோலி, இந்தி, உருது, பஞ்சாபி, ஆங்கிலம்
அரச குலங்கள் தோமரார்கள்-சௌகான்கள் (736-1192)
மம்லுக் வம்சம் (1206–1289)
கில்ஜி வம்சம்(1290–1320)
துக்ளக் வம்சம் (1320–1413)
சையிது வம்சம்(1414–51)
லோடி வம்சம் (1451–1526)
முகலாயர்கள்(1526–1540)
சூர் பேரரசு (1540-1553)
இந்து-ஹெமு(1553–56)
முகலாயர்கள்(1556-1857)
பிரித்தானிய ஆட்சி (1857–1947)
விடுதலை இந்தியா (1947–தற்காலம் வரை)

இதிகாச காலத்திலிருந்து, குறிப்பாக, மகாபாரத காலத்திலிருந்து இந்தியாவின் தலைநகரான தில்லி நீண்ட வரலாறு கொண்டது.

இந்து, இசுலாம் மற்றும் கிறித்தவப் பேரரசுகளின் ஆட்சி பீடமாக தில்லி விளங்கியது. இந்திய விடுதலைக்கு பிறகும் தில்லி இந்திய அரசின் தலைநகராக விளங்குகிறது. உலகின் மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரங்களில் ஒன்றாக தில்லி நகரம் உள்ளது. [1][2] அரப்பா அகழ்வாராய்ச்சியின் போது, தில்லி நகரத்தின் நரேலா மற்றும் நந்து நகரி பகுதிகளில் பல தொல்லியல் பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.[3]

இதிகாச காலம்[தொகு]

குரு நாட்டை கௌரவர் - பாண்டவர்களுக்கு பங்கிட்ட போது, பாண்டவர்களுக்கு கிடைத்த பங்கின் பகுதியின் தலைநகராக, தற்போதைய தில்லியான இந்திரப்பிரஸ்தம் விளங்கியது.

தொல்லியல் களங்கள்[தொகு]

அசோகரின் கல்வெட்டுகளில் ஒன்று 1966இல் தில்லியின் சிறீ நிவாசபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அசோகர் காலத்திய இரண்டு கல்வெட்டுகள், 14ஆம் நூற்றாண்டில், பிரேஷா துக்ளக் ஆட்சிக் காலத்தில் கண்டெடுக்கப்பட்டது. குப்தப் பேரரசின் முதலாம் குமார குப்தர் காலத்தில் நிறுவப்பட்ட, புகழ் பெற்ற தில்லி இரும்புத் தூண், கி பி பத்தாம் நூற்றாண்டில் குதுப் மினார் அருகே நிறுவப்பட்டது.

பெயர்க் காரணம்[தொகு]

பரத கண்டத்தின் மேற்கில் வாழ்ந்த தில்லு என்ற மிலேச்ச மன்னரால் நிறுவப்பட்ட நகரத்திற்கு தில்லி என பெயரிடப்பட்டது எனக் கருதப்படுகிறது.[4]

தில்லியின் ஆட்சியாளர்கள்[தொகு]

1863இல் பழைய தில்லி எனப்படும் ஷாஜகானாபாத்

வரலாற்றுக் காலத்தில் கி பி 736 முதல் 1947 முடிய தில்லியை தலைநகராகக் கொண்டு ஆண்ட அரச மரபினர்கள்:

  1. தோமரார்கள் (736-1192)
  2. அடிமை அரசர்கள் (1206–1289)
  3. கில்ஜிகள்(1290–1320)
  4. துக்ளக்குகள் (1320–1413)
  5. சையதுகள்(1414–51)
  6. லோடிகள் (1451–1526)
  7. முகலாயர்கள்(1526–1540)
  8. சூரிகள் (1540-1553)
  9. இந்து-ஹெமு (1553–56)
  10. முகலாயர்கள் (1556-1857)
  11. பிரித்தானியப் பேரரசு (1857–1947)

தில்லியின் குடியிருப்புகள்[தொகு]

நவீன தில்லி ஏழு பெரும் முக்கிய நகரக் குடியிருப்புகளைக் கொண்டது.[5] தில்லியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏழு பகுதிகள் புராணா கிலா, செங்கோட்டை, சிறி கோட்டை, மெஹ்ரௌலி, கிலா ராய் பித்தோரா, துக்ளகாபாத் மற்றும் பெரோஷ் ஷா கோட்லா மற்றும் ஷாஜகானபாத் ஆகும்.

தொடக்க வரலாறு[தொகு]

மகாபாரதம் கூறும் தில்லியின் ஐந்து கோயில்களில் ஒன்றான யோக மாயா கோயில்
தில்லி இரும்புத் தூண், இரண்டாம் சந்திரகுப்த மௌரியரால் (கி பி 375-413) நிறுவப்பட்டது.[6][7]

நாட்டர் கதைகளின் படி, தில்லியின் ஐந்து பிரஸ்தங்களின் ஒன்றானதும், பாண்டவர்களின் தலைநகராகவும் இருந்த இந்திரப்பிரஸ்தம் கி மு 3500இல் நிறுவப்பட்டது. மற்ற நான்கு பிரஸ்தங்கள் அல்லது சமவெளிகள், சோன்பட், பானிபட், தில்பட், பாக்பத் ஆகும். [4]

16வது நூற்றாண்டின் பாரசீக வரலாற்று ஆசிரியர் பிரிஷ்தாவின் கூற்றுபடி, யவனர்கள் எனப்படும் கிரேக்கர்களின் இந்திய படையெடுப்புகளுக்கு முன்னர், தில்லி நகரம் இராஜா தில்லு என்பவரால் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. [4]

தற்கால தில்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மெஹ்ரௌலி பகுதியில் தில்லி நகரம் யோகினி புரா எனும் பெயரில் மத்திய கால வரலாற்று காலத்தில் நிறுவப்பட்டது. தோமரா வம்ச மன்னர் அனங்கபாலன் காலத்தில் தில்லி முக்கியத்துவம் பெற்றது. 12ஆம் நூற்றாண்டில் சௌகான் அரச குல மன்னர் பிரித்திவிராசு சௌகான் ஆட்சிப் பகுதியில் சேர்க்கப்பட்டது.

8ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு முடிய[தொகு]

தோமரா அனங்கபாலானால் 736இல் கட்டப்பட்ட லால் கோட் கோட்டை, மெஹ்ரௌலி, தில்லி
10ஆம் நூற்றாண்டில் சௌகான் அரச மரபினரால் கட்டப்பட்ட கிலா ராய் பிதோரா கோட்டையின் சிதிலமடைந்த சுவர்களும் அருங்காட்சியகமும்

கி பி 736இல் தோமரா வம்ச மன்னர் அனங்கபாலனால், லால்கோட் கோட்டையும் தில்லி நகரமும் நிறுவப்பட்டது. குதுப் மினார் வளாகத்தில் உள்ள தில்லி இரும்புத் தூணில் மன்னர் முதலாம் பிரித்திவிராசு சௌகான் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.[8]

அஜ்மீர் சௌகான் மன்னர் லால்கோட் பகுதியை 1180இல் கைப்பற்றி, கிலா ராய் பித்தோரா எனப் பெயர் மாற்றினார். தில்லியை ஆண்ட இராஜபுத்திர குல மன்னர் மூன்றாம் பிரித்திவிராச் சௌகான், கோரி முகமதால், 1192இல் வெல்லப்படார். [9]

1206 முதல் தில்லியின் முதல் சுல்தான் குத்புத்தீன் ஐபக்கால் நிறுவப்பட்ட அடிமை அரசர்களின் (1206–1289) (சுல்தானகத்தின்) தலைநகராக தில்லி விளங்கியது. குத்புத்தீன் ஐபெக் தில்லியில் ஒரே வளாகத்தில் இருந்த 27 சமணக் கோயில்களை இடித்து விட்டு, அவ்விடத்தில் குதுப் மினார் கட்டினார். [10]

15 டிசம்பர் 1398இல் தைமூர் தில்லி மீது படையெடுத்து, துக்ளக்குகளை வென்று தில்லி நகரத்தை கைப்பற்றி, 18 டிசம்பர் 1398இல் தில்லி நகரத்தை முழுவதையும் எரித்தார். மேலும் ஒரு இலட்சம் போர்க் கைதிகளை கொல்லப்பட்டனர். [11][12] 1526இல் முதலாம் பானிபட் போரில், தில்லியின் ஆப்கானிய லோடி வம்ச சுல்தானை வென்று, பாபர் முதல் முகலாயப் பேரரசை நிறுவினார்.

16வது நூற்றாண்டு முதல் 19வது நூற்றாண்டு முடிய[தொகு]

ஆப்கானித்தான் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் இறந்த 90,000 போர் வீரர்களுக்கு நினைவாஞ்சலி செலுத்து விதமாக கட்டப்பட்ட இந்தியா கேட்
ஹெமு, 16ஆம் நூற்றாண்டில் முகலாயர்களை வீழ்த்தி தில்லி அரியணை ஏறியவர்.
1656இல் ஷாஜகான் கட்டிய ஜும்மா மசூதி

16வது நூற்றாண்டின் நடுவில் சூர் பேரரசின் ஆப்கானிய மன்னர் சேர் சா சூரி, பாபரின் மகன் உமாயூனை வென்றதால் முகலாயப் பேரரசின் ஆட்சி சில ஆண்டுகள் தடைபட்டது. தில்லியில் சூரி, புராண கிலா என்ற நகரப் பகுதியை நிறுவினார். சூர் வம்சத்தினர் தில்லியை 1553இல் ஆண்டனர். பின்னர் ஹெமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்தியன் தில்லியை கைப்பற்றி இந்துக்களின் நாட்டை நிறுவினார். பின்னர் அக்பர் தில்லியை கைப்பற்றி தலைநகரை ஆக்ராவிற்கு மாற்றியதால், தில்லியின் வளமை குன்றியது. 1638 இல் ஷாஜகான் தலைநகரை ஆக்ராவிலிருந்து தில்லிக்கு மாற்றிய பின்னர் பழைய தில்லி என்று தற்போது அழைக்கப்படும் நகரத்தை ஷாஜகான் தனது பெயரில் ஷாஜகானாபாத் என்ற பெயரில் நிறுவினார். அப்பகுதியில் ஜும்மா மசூதியும், செங்கோட்டையும் கட்டினார். அவுரங்கசீப் 1658இல் தில்லியின் சார்லிமர் தோட்டத்தில் முடிசூட்டிக் கொண்டார். 1680இல் அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பின்னர், தில்லியின் பெரும் பகுதிகளை மராத்தியர்கள் கைப்பற்றினர். [13]

தற்கால தில்லி

1737இல் மீண்டும் தில்லியின் மீதமிருந்த பகுதிகளையும் மராத்தியர்கள் கைப்பற்றி முகலாயர்களை வலுவிழக்கச் செய்தனர். பாரசீக மன்னர் நாதிர் ஷா தில்லி மீது படையெடுத்து தில்லியின் பெரும் செல்வங்களையும், மயிலாசனம் மற்றும் கோஹினூர் வைரத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

1757இல் அகமது ஷா துரானி தில்லி மீது படையெடுத்து, தில்லியின் ஆட்சியை மீண்டும் முகலாயர்களுக்கு வழங்கினார். 1803இல் நடந்த இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில், கிழக்கிந்திய கம்பெனி படைகள் மராத்தியப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினர்.[14] இந்த வெற்றியின் விளைவாக தில்லி 1836 முதல் 1858 வரை, கம்பெனி ஆட்சியின் வடமேற்கு மாகாணத்தின் ஒரு பகுதியானது.

1857 சிப்பாய்க் கிளர்ச்சியை காரணம் காட்டி, தில்லியின் இறுதி முகலாய மன்னர் பகதூர் ஷாவை நாடு கடத்தி, தில்லியை கிழக்கிந்திய கம்பெனியர்கள் கைப்பற்றினர். பின்னர் தில்லி, பிரித்தானியப் பேரரசின் தலைநகராக மாறியது.

இந்திய விடுதலை நாள் முதல்தில்லி இந்தியக் குடியரசின் தலைநகராக விளங்குகிறது.

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. List of cities by time of continuous habitation#Central and South Asia
  3. Singh, Upinder (2006). Delhi: Ancient History. Berghahn Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788187358299. https://books.google.com/books?id=KkpdLnZpm78C&source=gbs_navlinks_s. 
  4. 4.0 4.1 4.2 Gazetter, p. 233
  5. "Seven Cities of Delhi". Archived from the original on 2011-09-05. பார்க்கப்பட்ட நாள் 2016-08-22.
  6. Balasubramaniam, R. 2002
  7. Arnold Silcock; Maxwell Ayrton (2003). Wrought iron and its decorative use: with 241 illustrations (reprint ). Mineola, N.Y: Dover. பக். 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-486-42326-3. https://archive.org/details/wroughtironitsde0000ayrt. 
  8. Ghosh, A. (1991). Encyclopedia of Indian Archaeology. BRILL. பக். 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-09264-1. 
  9. http://global.britannica.com/EBchecked/topic/480820/Prithviraja-III[தொடர்பிழந்த இணைப்பு]
  10. Jāvīd, ʻAlī. "World Heritage Monuments and Related Edifices in India". Pg.107. Google Books. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
  11. "The Islamic World to 1600: The Mongol Invasions (The Timurid Empire)". Archived from the original on 2009-08-16. பார்க்கப்பட்ட நாள் 2016-08-22.
  12. William Wilson Hunter (1909). "The Indian Empire: Timur's invasion 1398". The Imperial Gazetteer of India. 2. பக். 366. http://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V02_401.gif. 
  13. Thomas, Amelia. Rajasthan, Delhi and Agra. Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-74104-690-8. 
  14. Mayaram, Shail (2003). Against history, against state: counterperspectives from the margins Cultures of history. Columbia University Press, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-12731-8. https://archive.org/details/againsthistoryag0000maya. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லியின்_வரலாறு&oldid=3582546" இலிருந்து மீள்விக்கப்பட்டது