கன்னட கல்வெட்டுகள்
சுமார் 25000 கல்வெட்டுகள் கன்னட[1] மொழியில் உள்ளன. இவைகள் கடம்பர்கள் , மேற்கு கங்கை வம்சம்,ராஷ்டிரகூடர்கள், சாளுக்யர்கள், ஓய்சாளர்கள் , விஜயநகர பேரரசுபோன்ற ஆட்சியாளர்களால் பொறிக்கப்பட்டுள்ளன. இவைகளில் புத்த மற்றும் சமண மதங்கள் தொடர்பான கல்வெட்டுகளே அதிகமாக உள்ளன. பெரும்பாலும் எழுத்து பொறிப்புகள் கல்லிலோ (ஷிலாஷாசனா) அல்லது செப்பு தகடுகளிலோ (ரதாமரஷாசனா). , கன்னடம் கல்வெட்டுகள் (பழைய கன்னடம், கடம்ப எழுத்து)வரலாற்று நடுகற்கள், நாணயம் , தூண்கள் , பாறைகள் மற்றும் கோவில் சுவர்களில் காணப்படுகிறது.
கல்வெட்டுகளில் காணப்படும் கன்னடத்தை பின்வருமாறு பிரிக்கலாம், ஆரம்பகால கன்னடம், முன் பழைய கன்னடம், பழைய கன்னடம், மத்திய கன்னடம் மற்றும் புதிய கன்னடம்.