உள்ளடக்கத்துக்குச் செல்

மோடி எழுத்துமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மராட்டி மொழியை எழுதப் பயன்படும் சுருக்கெழுத்து முறைகளில் ஒன்று மோடி எழுத்துமுறை ஆகும். மோடி நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள் தேவநாகரி வடிவத்தை அடியொற்றியவையாயினும் அதிலுள்ள பல எழுத்துக்கள் குறைக்கப்பட்டு, குறில், நெடில் வேறுபாடுகள் இன்றி இடத்துக்குத் தக்கவாறு பொருள்கொள்ளும்படி அமைந்து, எழுதுகோலை காகிதத்திலிருந்து எடுக்காமல் வேகமாக எழுத வசதியாக அமைந்தவை.

வரலாறு

[தொகு]

இசுலாமிய ஆட்சியாளர்கள் பார்சி மொழியை எழுதுவதற்கு இருவகை வரிவடிவங்களைப் பயன்படுத்தினர். தெளிவாகவும், மெதுவாகவும் எழுதுவதற்கு 'நாஸ்தலிக்' என்னும் முறையும், விரைவாக எழுதுவதற்கு 'சிகஸ்த' என்னும் முறையும் பயன்படுத்தப்பட்டது. இதைக்கண்ட தேவகிரி யாதவ அரசர்களின் முதன்மை அமைச்சராக (கி.பி. 1259 - 1274) இருந்த ஹேமாத்பந்த் (எ) ஹேமாத்ரி பண்டித் என்பவர் மராட்டி மொழிக்கும் இச்சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார்.

எல்லா மோடி எழுத்துக்கீற்றுக்களையும் காட்டும் படம், kotem1 எழுத்துரு பயன்படுத்தி உருவாக்கப்பட்டது

பெயர்க்காரணம்

[தொகு]

"மோடணே" (मोडणे) என்கிற மராட்டிச் சொல்லுக்கு "உடைத்தல்" என்று பொருள். தேவநாகரி வடிவத்தை உடைத்து உருவாக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கருதலாம். இதைத் தவிர்த்து, இலங்கையிலிருந்து வந்த எழுத்துமுறை என்பதுவோ, "மௌர்யி" என்ற அசோகனது எழுத்துமுறையிலிருந்து உருவானது என்பதுவோ, "குடில லிபி"யிலிருந்து வந்தது என்பதுவோ, சிவாஜி காலத்து பாலாஜி ஆவஜி என்பவர் உருவாக்கியது என்பதுவோ ஆதாரங்களற்ற ஒவ்வாத கருத்துக்கள் என்று கீழ்வரும் உசாத்துணை நூலின் பதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

தமிழகத்தில் மோடி எழுத்துமுறை

[தொகு]

சத்திரபதி சிவாஜியின் காலத்தில் மகாராஷ்டிராவிலிருந்து தஞ்சாவூருக்கு வந்த மராட்டியர், மோடி எழுத்துமுறையையும் தமிழகம் கொணர்ந்து பயன்படுத்தினர். கி.பி. 1676இல் ஏகோஜி (அ) வெங்கோஜி தஞ்சையைக் கைப்பற்றி ஆளத்தொடங்கியது முதல் கி.பி.1855இல் இரண்டாம் சிவாஜியின் ஆட்சி முடிவுற்றது வரையிலான மோடி ஆவணங்கள் கிடைத்துள்ளன.

குறியீட்டு மொழி

[தொகு]

தற்போதும் மோடி எழுத்துமுறையை கணக்கர்கள் குறியீட்டு மொழியாக பயன்படுத்தி வருகின்றனர். இம்மோடி எழுத்துமுறையை குறித்து புனே நகரத்தைச் சேர்ந்த்த ஆர்வலர்கள் சிலர் ஆராய்ந்து வருகின்றனர்.[2]

உசாத்துணை

[தொகு]
  1. தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும், குறிப்புரையும் (முதல் தொகுதி), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ஏப்ரல் 1989, ISBN 81-7090-136-7
  2. "மோடி எழுத்துமுறை". பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 3, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோடி_எழுத்துமுறை&oldid=2871011" இலிருந்து மீள்விக்கப்பட்டது