உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் சிவாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் சிவாஜி
சத்திரபதி, மராட்டியப் பேரரசு
மராட்டியப் பேரரசின் 4-வது சத்திரபதி
ஆட்சி1700-1707
1710-1714 (கோல்ஹாப்பூர் அரசு)
முன்னிருந்தவர்சத்திரபதி இராஜாராம்
பின்வந்தவர்இரண்டாம் சம்பாஜி
இரண்டாம் இராஜாராம் (கோல்ஹாப்பூர் அரசு)
வாரிசு(கள்)இரண்டாம் இராஜாராம்
முழுப்பெயர்
இரண்டாம் சிவாஜி போன்சலே
மரபுபோன்சலே
தந்தைசத்திரபதி இராஜாராம்
தாய்தாராபாய்
பிறப்பு6 சூன் 1696
செஞ்சி
இறப்பு14 மார்ச் 1726
ராய்கட் கோட்டை (அகவை 29)
சமயம்இந்து சமயம்


இரண்டாம் சிவாஜி (Shivaji II or Shiva Rajaram) (9 சூன் 1696 – 14 மார்ச் 1726), மராட்டியப் பேரரசர் சத்திரபதி இராஜாராம் - தாராபாய் இணையருக்குப் பிறந்தவர்.

வரலாறு

[தொகு]

இரண்டாம் சிவாஜி கைக்குழந்தையாக இருக்கையில், 1700-இல் மன்னர் சத்திரபதி இராஜாராம் இறந்து விடவே, இராணி தாராபாய் அரசப் பிரதிநிதியாக, மாரத்தியப் பேரரசை நிர்வகித்து வந்தார். இந்நிலையில் சத்திரபதி சிவாஜியின் பேரனும், சம்பாஜியின் மகனுமான சாகுஜி 1707ல் முகலாயர்களின் சிறைக்கூடத்திலிருந்து சாத்தாராவிற்கு தப்பி வந்தார். அங்கு தனக்கு பதிலாக மராட்டிய அரசராக வீற்றிருந்த இரண்டாம் சிவாஜியையும், அவரது அன்னை இராணி தாரபாயையும் அரியணையிலிருந்து அகற்றி, தான் மராத்தியப் பேரரசின் சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டார். [1][2] [2]

இந்நிலையில் இராணி தாராபாய், கோலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு கோல்ஹாப்பூர் இராச்சியத்தை நிறுவி இரண்டாம் சிவாஜியை மன்னராக்கினார். இரண்டாம் சிவாஜி கோல்ஹாப்பூர் இராச்சியத்தை 1710 முதல் 1714 முடிய ஆண்டார். இரண்டாம் சிவாஜியின் சிற்றன்னையும், தாராபாயின் சக்களத்தியுமான இராஜேஸ்பாய், இரண்டாம் சிவாஜியை அரியணையிலிருந்து அகற்றி, தமது மகன் இரண்டாம் சம்பாஜியை கோல்ஹாப்பூர் இராச்சியத்தின் மன்னராக்கினார். பின்னர் இரண்டாம் சிவாஜி 14 மார்ச் 1726-இல் அம்மை நோய் தாக்கி இறந்தார்.[3]

இரண்டாம் சம்பாஜியின் இறப்பிற்குப் பின் இருமாதங்கள் கழித்து, அவரது மனைவிக்கு இரண்டாம் இராஜாராம் எனும் குழந்தை பிறந்தது. சத்தாராவின் சத்திரபதி சாகுஜிக்கு ஆண் குழந்தை இல்லாததால், 1740-இல், இராணி தாராபாயின் பேரனும், இரண்டாம் சிவாஜியின் மகனுமான இரண்டாம் இராஜாராமை தத்து எடுத்து வளர்த்தார். சாகுஜியின் இறப்பிற்குப்பின் இரண்டாம் இராஜாராம் சதாரா அரசின் மன்னரானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. A. Vijaya Kumari; Sepuri Bhaskar. "Social change among Balijas: majority community of Andhra Pradesh". MD. பார்க்கப்பட்ட நாள் 2011-06-24.
  2. 2.0 2.1 Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 201–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80607-34-4.
  3. "Kolhapur State". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-06-10.
முன்னர் சத்திரபதி மராட்டியப் பேரரசு
1700–1707
பின்னர்
முன்னர்
மன்னர் கோல்ஹாப்பூர் அரசு
1710–1714
பின்னர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_சிவாஜி&oldid=3704424" இலிருந்து மீள்விக்கப்பட்டது