வெங்கோஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


வெங்கோஜி அல்லது எகோஜி (Venkoji Bhonsle) (மராத்தி: व्यंकोजी/एकोजी) (பிறப்பு:1629) போன்சலே வம்சத்தில் பிறந்த சத்ரபதி சிவாஜியின் இளைய தம்பியும், தஞ்சை நாயக்கர்களை வென்று 1676ல் தஞ்சை மராத்திய அரசை நிறுவியவரும் ஆவார். இவரது வழித்தோன்றல்களில் புகழ் பெற்றவர் இரண்டாம் சரபோஜி மன்னர் ஆவார்.

1855ல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள், தஞ்சாவூர் அரசை, சென்னை மாகாணத்துடன் இணைத்துக் கொண்டனர்.

தஞ்சாவூரை கைப்பற்றுதல்[தொகு]

பிஜப்பூர் சுல்தான் முகமது அடில்ஷாவின் படைத்தலைவராக இருந்த சாகாஜி போன்சலே – துக்காபாய் இணையருக்குப் பிறந்தவர் வெங்கோஜி என்ற ஏகோஜி. இவர் சத்ரபதி சிவாஜியின் சிற்றன்னையின் மகனும், இளைய தம்பியும் ஆவார். தந்தை சாகாஜி போன்சலேவின் மறைவிற்குப் பின் வெங்கோஜி பெங்களூருவின் ஜாகிர்தாராக, பிஜப்பூர் சுல்தானால் நியமிக்கப்பட்டார்.

சத்ரபதி சிவாஜி பெங்களூர் மீது படையெடுக்க வரவே, வெங்கோஜி சனவரி 1676ல் தஞ்சை நாயக்கர்கள் அரசை வீழ்த்தி, தன்னை தஞ்சாவூர் மன்னராக அறிவித்துக் கொண்டார். வெங்கோஜி இறந்த ஆண்டு குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளது.

வெங்கோஜியின் மகன் முதலாம் சாகுஜி, மதுரை நாயக்கர் அரசிற்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்த இராமநாதபுரம் மன்னருடன் உடன்படிக்கை செய்து கொண்டு, மதுரை நாயக்கர்களை வென்றார். இதனால் மதுரை நாயக்கர்களின் பிடியிலிருந்து விடுபட்டு இராமநாதபுரம் மன்னர் தன்னாட்சியுடன் ஆண்டார்.

இலக்கியம்[தொகு]

வெங்கோஜியின் காலத்தில் தஞ்சை அரசில் சமசுகிருதம் மற்றும் தெலுங்கு இலக்கியங்கள் வளர்ச்சி அடைந்தது. மேலும் தெலுங்கு மொழியில் இராமாயணம் இயற்றப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 'The Maratha Rajas of Tanjore' by K.R.Subramanian, 1928.

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
தஞ்சை நாயக்க மன்னர்
அழகிரி நாயக்கர்
வெங்கோஜி
தஞ்சாவூர் மராத்திய மன்னர்
(1676-1684)
பின்னர்
முதலாம் சாகுஜி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கோஜி&oldid=2488002" இருந்து மீள்விக்கப்பட்டது