மங்களேசன்
வாதாபி சாளுக்கியர் (பொ.ஊ. 543–753) | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||
மங்களேசன் (Mangalesa ஆட்சிக்காலம் கி.பி.596 - 610 ) என்பவன் முதலாம் கீர்த்திவர்மனுக்குப்பின் சாளுக்கிய அரியணையில் அமர்ந்தவன் ஆவான். கீர்த்திவர்மனின் மகனான இரண்டாம் புலிகேசி அவனது தந்தை இறந்தபோது சிறுவனாக இருந்ததாகக் கருதப்படுகிறது.
திறன்மிக்க வீரன்
[தொகு]இவன் ஒரு துடிப்பான மற்றும் லட்சியமான ஆட்சியாளனான இவன் பல போர்களில் வெற்றி பெற்று. நாட்டை விரிவாக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தான். இவன் புத்திராஜன் ஆட்சி செய்த காளச்சூரியின் மீது படையெடுத்தான். தொடர்ந்து குஜராத் , கந்தேசம், மால்வா ஆகிய நாடுகள் மீதும் படையெடுத்தான். மேலும் சுவாமிராஜா என்கிற ரேவதிதிவீபம் (கோவா) பகுதியின் ஆளுநரின் கலகத்தை அடக்கி கொங்கன் பகுதியில் மீண்டும் சாளுக்கிய அதிகாரத்தை நிலைநாட்டினான். இவனது 595 ஆண்டைய மகாகுத்தா தூண் கல்வெட்டின்வழியாக கங்கர் , பல்லவர் , சோழர் , அளுப்பர்,கதம்பர் ஆகியோரை அடக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
பட்டங்கள்
[தொகு]இவன் உருரணபராக்ரமன்,இரணவிக்கிரமன்,பரமபகவதா போன்ற பட்டங்களைச் சூடியிருந்தான்.
இறப்பு
[தொகு]இரண்டாம் புலிகேசிக்கு உரிய வயது வந்த போதும், மங்களேசன் புலிகேசியிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் தாமதப்படுத்தி வந்தான். காரணம் தனது மகன் சுந்தரவர்மனை மன்னனாக்கவேண்டும் என்ற விருப்பத்தினால் தான் ஆட்சியில் நீடிக்க விரும்பினான்.
இதனால் தனது சிற்றப்பனை எதிர்த்து புலிகேசி கிளர்ச்சியில் ஈடுபட்டான். புலிகேசி தனது நண்பர்கள் பலர் உதவியுடன் படைதிரட்டி மங்களேசன் மீது போரை நடத்தினான். இவர்களுக்குள் நடந்த போரில் மங்களேசன் தற்போதைய அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இலப்பட்டு-சிம்பிங்கி போர்க்களத்தில் கொல்லப்பட்டான் . இந்த நிகழ்ச்சி கி.பி.610ஆம் ஆண்டைய பேதவது-குரு கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது.
மேற்கோள்
[தொகு]- Nilakanta Sastri, K.A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984).
- Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
- Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).