உள்ளடக்கத்துக்குச் செல்

விஜயாதித்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜயாதித்தன் (Vijayaditya ஆட்சிக்காலம் 696-733 ) என்பவன் ஒரு சாளுக்கிய மன்னனாவான். தனது தந்தையான வினையாதித்தனைத் தொடர்ந்து சாளுக்கிய அரியணையில் அமர்ந்தான். இவனது நீண்ட ஆட்சிக்காலத்தில் நாட்டில் நிலவிய பொது அமைதி மற்றும் வளமை குறிப்பிடத்தக்கது. விஜயாதித்தனும் தன் முன்னோர்போல பல கோயில்களைக் கட்டினான். இவன் பல்லவர் மற்றும் ஐந்தாம் பரமேசுவரவர்மன் ஆகியோரிடம் போர்புரிந்தான். சாளுக்கியரின் மேலாட்சிக்கு எதிராக போராடிய அளுப்பர்களை தோற்கடித்தான். மங்களூரில் பாண்டியர் படையெடுப்பை முறியடித்தான்.இவனுக்குப்பின் இவனது மகன் இரண்டாம் விக்ரமாதித்யன் 733இல் ஆட்சிக்குவந்தான்.

மேற்கோள்

[தொகு]
  • Nilakanta Sastri, K.A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984).
  • Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
  • Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).
  • South Indian Inscriptions - http://www.whatisindia.com/inscriptions/
  • History of Karnataka, Mr. Arthikaje
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயாதித்தன்&oldid=2487921" இலிருந்து மீள்விக்கப்பட்டது