கோன்பவுங் வம்சம்
கோன்பவுங் வம்சம் | ||||||
| ||||||
| ||||||
தலைநகரம் | சிவெப்போ (1752–1760) சகையிங் (1760–1765) இன்வா (1765–1783, 1821–1842) அமராபுரா(1783–1821, 1842–1859) மண்டலே (1859–1885) | |||||
மொழி(கள்) | பர்மியம் | |||||
சமயம் | தேரவாத பௌத்தம் | |||||
அரசாங்கம் | முடியாட்சி | |||||
அரசர் | ||||||
- | 1752–1760 | அலௌங்பயா (முதல்) | ||||
- | 1878–1885 | திபாவ் மின் (இறுதி) | ||||
சட்டசபை | ஹலுட்டவ் | |||||
வரலாற்றுக் காலம் | துவக்க நவீன காலம் | |||||
- | நிறுவப்பட்ட ஆண்டு | 29 பிப்ரவரி 1752 | ||||
- | ஒன்றிணைந்த பர்மா | 1752–1757 | ||||
- | பர்மா -சியாம் போர்கள் | 1760–1854 | ||||
- | சீன-பர்மியப் போர் | 1765–1769 | ||||
- | ஆங்கிலேய-பர்மியப் போர்கள் | 1824–1826, 1852, 1885 | ||||
- | முடிவுற்ற ஆண்டு | 29 நவம்பர் 1885 | ||||
பரப்பளவு | ||||||
- | 1824[1] | 7,94,000 km² (3,06,565 sq mi) | ||||
- | 1826 | 5,84,000 km² (2,25,484 sq mi) | ||||
- | 1852 | 4,70,000 km² (1,81,468 sq mi) | ||||
- | 1875 | 4,60,000 km² (1,77,607 sq mi) | ||||
மக்கள்தொகை | ||||||
- | 1824[1] est. | 3,000,000 | ||||
அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km² (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
நாணயம் | கியாத் (1852 முதல்) | |||||
Warning: Value not specified for "continent" |
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
கோன்பவுங் வம்சம் (Konbaung dynasty) pronounced: [kóʊɴbàʊɴ kʰɪʔ]), பர்மாவை இறுதியாக 1752 முதல் 1885 வரை ஆண்ட இவ்வரச மரபை முன்னர் அலோம்பர அல்லது அலௌங்பயா வம்சம் என அழைத்தனர். இவ்வரச மரபு நவீன பர்மாவை உருவாக்கியதற்கு முக்கியப் பங்கு வகித்தது. இவ்வரச மரபு தற்கால தாய்லாந்து மற்றும் தற்கால இந்தியாவின் வடகிழக்கு இந்தியாவைக் கைப்பற்றி 100 ஆண்டுகள் ஆண்டது.
1824 -1885 முடிய நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்களில், இந்த பர்மிய அரச மரபு முதலில் தனது ஆட்சியின் கீழிருந்த அகோம் பேரரசு, மணிப்பூர் இராச்சியம் போன்ற வடகிழக்கு இந்தியப் பகுதிகளை பிரித்தானிய இந்தியாவிடம் இழந்தது.
பின்னர் 1852 - 1853-இல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேயப் பர்மியப் போரில், இந்த பர்மியப் பேரரசு ரங்கூன் உள்ளிட்ட கீழ் பர்மாவை ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். எனவே இருநாடுகளும் யாந்தபு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதன்படி பர்மிய அரசு ஆங்கிலேயர்களுக்கு பெருந்தொகை போர் ஈட்டுத்தொகையாக செலுத்த வேண்டியதாயிற்று.
1885-இல் நடைபெற்ற ஆங்கிலேய-பர்மியப் போரில் இந்த பர்மிய அரச மரபினர் மேல் பர்மாவை ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். இதனால் பர்மாவில் கோன்பவுங் வம்சத்தின் முடியாட்சி வீழ்ந்தது. 1885-இல் பர்மாவில் பிரித்தானிய ஆட்சி மலர்ந்தது. பர்மா பிரித்தானிய இந்தியாவின் ஒரு மாகாணமாக 1937 முடிய விளங்கியது. பின்னர் பர்மா தனி துணைநிலை ஆளுநரின் கீழ் தனி காலனி நாடானது. 1948-இல் பர்மா பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை ஆனது.
கோன்பவுங் வம்சத்தின் பர்மாப் பேரரசின் ஆட்சியாளர்கள்[தொகு]
- அலௌங்பயா - (1752 - 1760)
- நவுங்தவுக்கி - (1760 – 1763)
- சிங்பிஉசின் (1763–1776)
- சிங்கு - (1776–1781)
- பவுங்கா - 1782
- போதவ்பயா (1782–1819)
- பாகிய்தாவ் - 1819–1837
- தாராவதி - 1837–1846
- பாகன் - 1846–1853
- மிண்டோன் - 1853–1878
- திபாவ் மின்- 1878–1885
இதனையும் காணக[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Harvey 1925, பக். 333.