தார்வாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தார்வாடு
ಧಾರವಾಡ
—  நகரம்  —
தார்வாடு
ಧಾರವಾಡ
இருப்பிடம்: தார்வாடு
ಧಾರವಾಡ
, கருநாடகம்
அமைவிடம் 15°27′N 75°00′E / 15.45°N 75.0°E / 15.45; 75.0ஆள்கூறுகள்: 15°27′N 75°00′E / 15.45°N 75.0°E / 15.45; 75.0
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் தார்வாடு
ஆளுநர் வாஜுபாய் வாலா
முதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா
நகரத்தந்தை
மக்களவைத் தொகுதி தார்வாடு
ಧಾರವಾಡ
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


679 மீட்டர்கள் (2,228 ft)

இணையதளம் dharwad.nic.in/
தார்வாட் பேடா
உலவி ஸ்ரீ சென்னபசவேசுவரா கோவில்

தார்வாடு (Dharwad), (கன்னடம்: ಧಾರವಾಡ) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் உள்ள ஓர் நகரமாகும். இது தார்வாட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராக விளங்குகிறது. 1961ஆம் ஆண்டு இங்கிருந்து 22 கிமீ தொலைவிலுள்ள இதன் இரட்டை நகரமான ஹூப்ளியுடன் இணைந்து உருவான ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி 200.23 கிமீ² பரப்பளவை கொண்டுள்ளது.

மாநிலத் தலைநகர் பெங்களூரில் இருந்து 425 கிமீ தொலைவில் நான்காம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வேனில் காலத்தில் வெப்பம் மிகுந்தும் பருவக்காற்றுக் காலத்தில் ஈரமிகுந்தும் குளிர்காலத்தில் இதமான காலநிலையுடன் விளங்குகிறது.

இந்த இரட்டை நகரங்களின் வரலாறு ஹொய்சளர் காலத்திலிருந்து துவங்குகிறது. இந்திய செவ்விசைக்கும் இலக்கியத்திற்கும் தார்வாட் மிகுந்த பங்களிப்புகள் வழங்கியுள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களான கர்நாடகா பல்கலைக்கழகம் போன்றவை இங்கு அமைந்துள்ளன. இங்கு பாலிலிருந்து தயாரிக்கப்படும் தார்வாட் பேடா புகழ்பெற்றது.

இது மாணவர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்களுடன் அமைதியான நகரமாக உள்ளது. இதன் தெற்கு, வடக்கு பகுதிகளில் தொழிலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இரு பெரும் தொழில்நகரங்களான பெங்களூருக்கும் புனேவிற்கும் சம தொலைவில் உள்ளதால் தார்வாட்டின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]


வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தார்வாடு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்வாடு&oldid=3391014" இருந்து மீள்விக்கப்பட்டது