சித்தராமையா
சித்தராமையா Siddaramaiah | |
---|---|
சித்தராமையா 2016-ல் | |
22வது கருநாடக முதலமைச்சர் | |
பதவியில் 13 மே 2013 – 17 மே 2018 | |
ஆளுநர் | |
முன்னையவர் | செகதீசு செட்டர் |
பின்னவர் | பி. எஸ். எடியூரப்பா |
கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் | |
பதவியில் 9 அக்டோபர் 2019 – 13 மே 2023 | |
முன்னையவர் | பி. எஸ். எடியூரப்பா |
பின்னவர் | பசவராஜ் பொம்மை |
பதவியில் 8 சூன் 2009 – 12 மே 2013 | |
முன்னையவர் | மல்லிகார்ச்சுன் கர்கெ |
பின்னவர் | எச். டி. குமாரசாமி |
கருநாடக துணைமுதல்வர் | |
பதவியில் 28 மே 2004 – 5 ஆகத்து 2005[1] | |
பின்னவர் | எம். பி. பிரகாசு |
தொகுதி | சாமூண்டிசுவரி |
பதவியில் 16 மே 1996 – 22 சூலை 1999 | |
முன்னையவர் | ஜே. ஹெச். படேல் |
தொகுதி | சாமூண்டிசுவரி |
கர்நாடக சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
முன்னையவர் | பி பி சிம்மனகட்டி |
தொகுதி | பாதாமி சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2008–2018 | |
முன்னையவர் | Seat established |
பின்னவர் | யதீந்திர சித்தராமையா |
தொகுதி | வருணா |
பதவியில் 2004–2007 | |
முன்னையவர் | ஏ. எஸ்.குருசுவாமி |
பின்னவர் | எம். சத்தியநாராயணா |
தொகுதி | சாமுண்டேசுவரி |
பதவியில் 1994–1999 | |
முன்னையவர் | மு. ராஜசேகர மூர்த்தி |
பின்னவர் | ஏ. எஸ்.குருசுவாமி |
தொகுதி | சாமூண்டிசுவரி |
பதவியில் 1983–1989 | |
முன்னையவர் | டி.ஜெயதேவராஜா அர்ஸ் |
பின்னவர் | மு. ராஜசேகர மூர்த்தி |
தொகுதி | சாமூண்டிசுவரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 ஆகத்து 1947
-08-03)[2][3] வருணா, மைசூர், கருநாடகம், இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | பார்வதி |
பிள்ளைகள் |
|
முன்னாள் கல்லூரி |
|
சித்தராமையா (Siddaramaiah)(பிறப்பு 3 ஆகத்து 1947),[4] என்பவர் சித்து எனும் புனைப்பெயரால்[a] கருநாடகாவில் நன்கு அறியக்கூடிய இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடகாவின் 22வது முதலமைச்சராக 13 மே 2013 முதல் 17 மே 2018 வரை பணியாற்றினார். முழு ஆட்சிக்காலமும் முதல்வராக பதவி வகித்த இரண்டாவது நபராக இருந்தார். சித்தராமையா 2018 முதல் பாதாமி சட்டமன்றத் தொகுதியையும், 2008 முதல் 2018 வரையும் மீண்டும் 2023-ல் சாமூண்டிசுவரி சட்டமன்றத் தொகுதியையும், 2004 முதல் 2007, 1994 முதல் 1999 வரை மற்றும் 1983 முதல் 1989 வரை சாமுண்டேசுவரி சட்டமன்றத் தொகுதியினையும் கர்நாடக சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2004 முதல் 2005 வரையும் 1996 முதல் 1999 வரையும் கர்நாடகாவின் துணை முதல்வராக இருந்துள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். காங்கிரசு கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[14][15][16] சித்தராமையா பல ஆண்டுகளாக பல்வேறு ஜனதா பரிவார் பிரிவுகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.[17][18][19]
இளமையும் கல்வியும்
[தொகு]சித்தராமையா மைசூர் மாவட்டம் டி. நரசிபுராவிற்கு அருகிலுள்ள வருணா ஹோப்லியில் சித்தராமனஹுண்டி என்ற தொலைதூர கிராமத்தில் சித்தராம கவுடா மற்றும் போரம்மா ஆகியோருக்கு மகனாக விவசாய குடும்பம் ஒன்றில் பிறந்தார்.[20] இவருடன் பிறந்தவர்கள் ஐவர். இவர் இரண்டாவது நபர் ஆவார். இவர் குருபா கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர்.[21] இவர் தனது பத்து வயது வரை முறையான பள்ளிப்படிப்பினைக் கற்கவில்லை. ஆனால் இளநிலை அறிவியல் மற்றும் இளங்கலைச் சட்டம் மைசூர் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுள்ளார்.[22] சித்தராமையா மைசூரில் வழக்கறிஞர் சிக்கபோரையாவிடம் இளையவராக பயிற்சி பெற்றார்.[23]
திருமண வாழ்க்கை
[தொகு]சித்தராமையா பெயர்ப் பயனாளி ஆவார். சித்தராமையா பார்வதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு இரண்டு மகன்கள். அரசியலில் வாரிசாகக் கருதப்படும் இவரது மூத்த மகன் ராகேசு ஆவார், 2016ஆம் ஆண்டில் 38 வயதில் பல உறுப்பு செயலிழப்பால் இறந்தார்.[24] இளைய மகன் யதீந்திரா, 2018ஆம் ஆண்டு வருணா சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[25]
சித்தாராமையா ஒரு நாத்திகர் ஆவார்.[26] இருப்பினும் இவர் சமீபத்தில் இந்த விடயத்தில் தனது பொது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். அதாவது "நான் நாத்திகன், அது நான் இல்லை. நான் ஆன்மீகவாதி - நான் சிறுவயதில் விழாக்களில் பங்கேற்றேன். சில பிரபலமான யாத்திரை மையங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் நான் எல்லாவற்றையும் பார்ப்பதால் மூடநம்பிக்கைக்கு எதிரானவன். அறிவியல் பார்வை கொண்டவன்," என தெரிவித்தார்.[27]
அரசியல் பங்களிப்பு
[தொகு]இவர் 1978 ல் அரசியல் தனது பங்களிப்பை துவக்கினார், ஜனதா கட்சி, மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தவர். 1999-2005 வரை கர்நாடக முன்னாள் பிரதமர் தேவ கவுடா அவர்களது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவராக இருந்தார்.[28] இவர் கருநாடக சட்டசபைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[29][30] இவர் இருமுறை கருநாடக மாநில துணை முதல்வராக இருந்தார்.
தேர்தல் செயல்பாடு
[தொகு]முதலமைச்சர் பதவி
[தொகு]2013 ல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், காங்கிரசு வெற்றி பெற்றவுடன் புதிய முதல்வரை தேர்வு செய்ய நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் சித்தராமையா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கர்நாடக மாநிலத்தின் 22வது முதல்வராக காங்கிரசு கட்சியின் சார்பாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.[37][38] 2013 சட்டப் பேரவைத் தேர்தலில் 122/224 இடங்களுடன் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று இந்திய தேசிய காங்கிரசை வெற்றிக்கு அழைத்துச் சென்றார், சித்தராமையா.[39]
மே 15, 2018 அன்று, 2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் தீர்ப்பை மதித்து, காங்கிரசின் தோல்வியினையடுத்து கருநாடக முதல்வர் பதவிலிருந்து விலகினார்.[40] கடந்த 40 ஆண்டுகளில் முழு 5 ஆண்டுகள் பதவி வகித்த கர்நாடகாவின் முதல் முதலமைச்சராகவும், தேவராஜ் அர்ஸுக்குப் பிறகு தென் மாநில வரலாற்றில் இரண்டாவது முறையாகவும் பதவிவகித்தப் பெருமையினை இவர் பெற்றார்.[41] கர்நாடக அரசின் நிதியமைச்சராக 13 முறை மாநில பட்ஜெட் தாக்கல் செய்த சாதனையையும் இவர் படைத்துள்ளார். எதிர்க்கட்சிகளால் மாநில கருவூலத்தில் கடன் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், இவர் மாநிலத்தின் நிதி பொறுப்பு மற்றும் வரவுசெலவு திட்ட மேலாண்மை சட்டத்தின் வரம்பிற்குள் நிதி விவேகத்தை பராமரிப்பதற்காக அறியப்படுகிறார்.[42]
2023ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு வெற்று பெரும்பான்மை பெற்ற பிறகு, இவர் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடன் துணை முதல்வராக டி. கே. சிவக்குமார் பதவியேற்கின்றார்.[43]
வ. எண் | அலுவல் காலம் | கட்சி | பதவி |
---|---|---|---|
1. | 16 மே 1996 – 22 சூலை 1999 | ஜனதா தளம் | துணை-முதல்வர் (கருநாடகம்)[44] |
2. | 28 மே 2004 – 5 ஆகத்து 2005 | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | துணை-முதல்வர் (கருநாடகம்)[45] |
3. | 13 மே 2013 – 17 மே 2018 | இந்திய தேசிய காங்கிரசு | முதலமைச்சர் கருநாடகம்[46] |
பிற பதவிகள்
[தொகு]- நிதி அமைச்சர், கர்நாடகா (1994)
- கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள் அமைச்சர் (1985)
- பட்டு வளர்ப்பு மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்
- போக்குவரத்து துறை அமைச்சர்
- உயர்கல்வித்துறை அமைச்சர்
- உறுப்பினர், காங்கிரசு செயற்குழு
- சாமுண்டேசுவரி, வருணா மற்றும் பாதாமி சட்டமன்றத் தொகுதிகளில் பல முறை சட்டமன்ற உறுப்பினர்
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Special Correspondent: Siddaramaiah, two others dropped., தி இந்து, 6 August 2005.
- ↑ "Stage set for Karnataka Cong heavyweight Siddaramaiah's 75th birthday bash". ThePrint. 2 August 2022. https://theprint.in/india/stage-set-for-karnataka-cong-heavyweight-siddaramaiahs-75th-birthday-bash/1065520/.
- ↑ "Around 6 lakh expected to participate in Siddaramaiah's birthday event" (in en-IN). The Hindu. 2 August 2022. https://www.thehindu.com/news/national/karnataka/around-6-lakh-expected-to-participate-in-siddaramaiahs-birthday-event/article65717200.ece.
- ↑ "Siddaramaiah's affidavit". பார்க்கப்பட்ட நாள் 6 April 2004.
- ↑ "CM Siddu confident of winning in coming election – Mysuru Today" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
- ↑ "Vishwanath backs Ibrahim, says many are not happy with CM Siddu". coastaldigest.com – The Trusted News Portal of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
- ↑ Big Kannada push ahead of polls; CM Siddu appeases pro Kannada outfits (in ஆங்கிலம்), archived from the original on 2021-12-21, பார்க்கப்பட்ட நாள் 2021-08-09
- ↑ "Karnataka CM Siddu's 'Bhagya' budgets swell debt burden to Rs 2.86 lakh crore". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
- ↑ "CM Siddu to Modi: Give Bharat Ratna to Siddaganga seer". Asianet News Network Pvt Ltd (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
- ↑ shastri, vittal (2018-05-06). "Get famous, elect your next CM: Siddu to Badami". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
- ↑ "Hegde was my political guide, not Deve Gowda, says CM Siddu". Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-22. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
- ↑ "UP BJP loses 3rd MLA to Covid – Mysuru Today" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
- ↑ Kannada, TV9 (2021-05-02). "FMR CM Siddu: ಆರೋಗ್ಯ ಸಚಿವರಿಗೇ ಫೋನ್ ಮಾಡಿದ್ದೀನಿ ಆದ್ರೂ ರೆಮ್ಡಿಸಿವರ್ ಇಂಜೆಕ್ಷನ್ ಸಿಗಲಿಲ್ಲ". TV9 Kannada (in கன்னடம்). Archived from the original on 2021-08-09. பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Prabhu, Nagesh (2018-07-19). "CWC membership means it's a triple role for Siddaramaiah" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/cwc-membership-means-its-a-triple-role-for-siddaramaiah/article24455057.ece.
- ↑ "Siddaramaiah enters national stage with Congress Working Committee entry".
- ↑ "I'm Sidda-Rama and 100% Hindu: Karnataka CM Siddaramaiah". 16 July 2017. http://timesofindia.indiatimes.com/city/mysuru/im-sidda-rama-and-100-hindu-karnataka-cm-siddaramaiah/articleshow/59615322.cms.
- ↑ Raghuram, M. (10 May 2013). "Siddaramaiah: How a Mysore boy made it to the top". DNA (Mysore). http://www.dnaindia.com/india/1833073/report-siddaramaiah-how-a-mysore-boy-made-it-to-the-top.
- ↑ "Siddaramaiah sworn in as Karnataka chief minister". Southmonitor.com.
- ↑ Kulkarni, Mahesh (8 May 2013). "Siddaramaiah - Profiling the front runner for K'taka CM". பிசினஸ் ஸ்டாண்டர்ட் (Bangalore). http://www.business-standard.com/article/current-affairs/siddaramaiah-profiling-the-front-runner-for-k-taka-cm-113050800672_1.html.
- ↑ Raghuram, M. (11 May 2013). "He was born headstrong: Siddaramaiah". Daily News and Analysis. பார்க்கப்பட்ட நாள் 2013-05-11.
- ↑ Bennur, Shankar (11 May 2013). "Siddaramanahundi celebrates elevation of its proud son". The Hindu (Siddaramanahundi). http://www.thehindu.com/news/national/karnataka/siddaramanahundi-celebrates-elevation-of-its-proud-son/article4703483.ece.
- ↑ "K Siddaramaiah Biography". பார்க்கப்பட்ட நாள் 27 Aug 2021.
- ↑ "He was born headstrong: Siddaramaiah".
- ↑ "Rakesh Siddaramaiah, Karnataka CM's son, dies in Belgium". இந்தியன் எக்சுபிரசு (New Delhi). 2016-07-30. http://indianexpress.com/article/india/india-news-india/rakesh-siddaramaiah-karnataka-cm-siddaramaiah-passes-away-2944486/.
- ↑ "Varuna Election Result 2018 Live: Varuna Assembly Elections Results (Vidhan Sabha Polls Result)". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-02-05.
- ↑ "Siddaramaiah to file defamation case against Yeddyurappa". The Hindu. 2011-02-01. http://www.thehindu.com/news/national/karnataka/Siddaramaiah-to-file-defamation-case-against-Yeddyurappa/article15130667.ece.
- ↑ "I'm not an atheist says Karnataka Chief Minister Siddaramaiah". Mail Today. 2016-02-23. http://indiatoday.intoday.in/story/im-not-an-atheist-says-karnata-chief-minister-siddaramaiah/1/602892.html.
- ↑ தினமணி
- ↑ http://www.thehindu.com/news/national/karnataka/will-siddaramaiah-be-lord-of-varuna/article4637356.ece
- ↑ http://www.ndtv.com/article/assembly-polls/karnataka-election-results-race-for-chief-minister-s-post-begins-siddaramaiah-kharge-frontrunners-364150
- ↑ 31.0 31.1 31.2 31.3 31.4 31.5 "Chamundeswari Assembly Constituency Election Result". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 17 Jan 2023.
- ↑ "Sitting and previous MLAs from Chamundeshwari Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 7 Feb 2023.
- ↑ "AC Bye Election: Chamundeshwari 2006". indiavotes.com. பார்க்கப்பட்ட நாள் 7 Feb 2023.
- ↑ 34.0 34.1 "Varuna Assembly Constituency Election Result". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 17 Jan 2023.
- ↑ "Chamundeshwari Assembly Constituency Election Result". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 17 Jan 2023.
- ↑ "Badami Assembly Constituency Election Result". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 17 Jan 2023.
- ↑ கர்நாடகாவின் முதல்வராக சித்தராமைய்யா தேர்வு தினமணி 10 May 2013
- ↑ Siddaramaiah to be next Karnataka Chief Minister The Hindu May 10, 2013
- ↑ Siddaramaiah rated fourth most popular Chief Minister in the country
- ↑ "Siddaramaiah resigns after Cong defeat in Karnataka polls - Times of India ►". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/siddaramaiah-resigns-after-cong-defeat-in-karnataka-polls/articleshow/64176243.cms.
- ↑ "Siddaramaiah becomes first Karnataka CM in 40 years to finish full term". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-15.
- ↑ "Latest Business and Financial News : The Economic Times on mobile".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ https://www.ndtv.com/india-news/siddaramaiah-to-be-karnataka-chief-minister-dk-shivakumar-will-be-deputy-will-continue-as-state-party-chief-says-congress-4044515#pfrom=home-ndtv_topscroll
- ↑ "Rediff On The NeT: Karnataka CM sacks 8 ministers". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
- ↑ "Siddaramaiah, two others dropped" (in en). The Hindu இம் மூலத்தில் இருந்து 2006-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060302065326/http://www.hindu.com/2005/08/06/stories/2005080613530100.htm.
- ↑ "Siddaramaiah takes oath as 22nd CM of Karnatakahttps" (in en). One India. https://www.oneindia.com/2013/05/13/siddaramaiah-takes-oath-as-22nd-karnataka-cm-1215425.html.