தரம்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தரம்சிங் நாராயன் சிங்[1] (25, திசம்பர் 1936 - 27 சூலை 2017) கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஆவார். 2004[2]-2006[3] வரை முதல்வராக இருந்த இவர், கர்நாடகாவின் 17ஆவது முதல்வர் ஆவார். இவர் 7 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். பதினான்காவது மக்களவையில் உறுப்பினராகவும் இருந்தார்.

பிறப்பு[தொகு]

தரம்சிங், குல்பர்கா மாவட்டத்திலுள்ள செவர்கி தாலுக்காவின் நெலோகி கிராமத்தில் பிறந்தார்.[1] இவர் தனது முதுகலை மற்றும் சட்டப்படிப்பை ஐதராபாத்திலுள்ள ஓசுமானியா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

அரசியல்[தொகு]

  • 1960: குலபர்கா நகராட்சி உறுப்பினர்
  • 1978–2008: கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
  • 1999-2004: பொதுத்துறை அமைச்சர், கர்நாடகா
  • 2004-2006: கர்நாடக முதல்வர்
  • 2006-2007: எதிர்க்கட்சித் தலைவர்.
  • 2009-2014: மக்களவை உறுப்பினர்

இறப்பு[தொகு]

2017ஆம் ஆண்டு சூலை 27ஆம் நாள் பெங்களூரில் மாரடைப்பால் உயிரிழந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Invicible Dharam Singh". Karnataka.com. பார்த்த நாள் 27 சூலை 2017.
  2. S. Rajendran. "Dharam Singh, Siddaramaiah sworn in". The Hindu. பார்த்த நாள் 27 சூலை 2017.
  3. "Dharam Singh resigns as Karnataka CM". Rediff.com (28 Jan 2006). பார்த்த நாள் 27 சூலை 2017.
  4. "கர்நாடகா முன்னாள் முதல்வர் தரம்சிங் மாரடைப்பால் காலமானார்". 28 சூலை 2017. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=322750. பார்த்த நாள்: 27 சூலை 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரம்சிங்&oldid=2794647" இருந்து மீள்விக்கப்பட்டது