உள்ளடக்கத்துக்குச் செல்

இளங்கலைச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்டங்களின் இளையர் (இலத்தீன்: Legum Baccalaureus; ஆங்கில மொழி: Bachelor of Laws; LL.B. or சச.இ. or B.L.) என்பது சட்டத்தில் ஓர் இளங்கலை பட்டம் (அல்லது ஆள்வரை சார்ந்து சட்டத்தில் ஓர் முதல் தொழிற்கல்வி பட்டம்) ஆகும். இது இங்கலாந்தில் தோன்றியதும் யப்பான் மற்றும் ஒருங்கிணைந்த நாடுகள் மற்றும் கனடா தவிர்த்து பெரும்பான்மையான பொதுச் சட்ட ஆள்வரைகளில் வழக்கறிஞர் ஆகிட வழங்கப்படும் பட்டமாகும்.[1] இது வரலாற்று ரீதியாக யு.எஸ்.யிலும் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது, ஆனால் 1960 களின் நடுப்பகுதியில் சட்டவியலில் முனைவர் (ஜூரிஸ் டாக்டர்) பட்டத்திற்கு ஆதரவாக இது நிறுத்தப்பட்டது.

வரலாற்று ரீதியாக, கனடாவில், சட்டங்களில் இளையர் என்பது பொதுச் சட்டத்தில் முதல் பட்டத்திற்கான பெயராகும், ஆனால் மேலும் ஒரு சில க்யூபக் பல்கலைக்கழகங்களால் உரிமையியல் சட்டத்தில் இளையர் எனும் பெயரில் பட்டம் வழங்கப்படுகிறது. கனடா பொதுச் சட்ட சட்டங்களில் இளையர் பாடத்திட்டம், நடைமுறையில், இரண்டாம் நுழைவு பட்டமாகும். அதாவது ஏற்கனவே ஏதேனும் துறையில் ஒன்றோ கூடுதலோ இளங்கலை பட்டம் பெற்றவர்களே அனுமதிக்கப்படுவார்கள். தற்பொது, சட்டங்களில் இளையர் ஸ்கோட் சட்டம் மற்றும் தென்னாப்பிக்கா சட்டங்களில் முதல் பட்டத்திற்கான பெயராகும். ஸ்கோட்லான்ட் மற்றும் தென்னாப்பிக்கா பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இப்பட்டம் பகுதி பொதுச் சட்டமும் பகுதி உரிமையியல் சட்டமுமாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Professional Objectives in Legal Education: American Trends and English Comparisons," Pressing Problems in the Law, Volume 2: What are Law Schools For?, Oxford University Press, 1996.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கலைச்_சட்டம்&oldid=2953644" இலிருந்து மீள்விக்கப்பட்டது