ஹூப்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹூப்ளி
ಹುಬ್ಬಳ್ಳಿ
பூப்பள்ளி
—  நகரம்  —
ஹூப்ளி
ಹುಬ್ಬಳ್ಳಿ
பூப்பள்ளி
இருப்பிடம்: ஹூப்ளி
ಹುಬ್ಬಳ್ಳಿ
பூப்பள்ளி
, கருநாடகம்
அமைவிடம் 15°21′42″N 75°05′06″E / 15.3617°N 75.0849°E / 15.3617; 75.0849ஆள்கூறுகள்: 15°21′42″N 75°05′06″E / 15.3617°N 75.0849°E / 15.3617; 75.0849
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் தார்வாட் மாவட்டம்
ஆளுநர் வாஜுபாய் வாலா
முதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா
நகரத்தந்தை
மக்களவைத் தொகுதி ஹூப்ளி
ಹುಬ್ಬಳ್ಳಿ
பூப்பள்ளி
மக்கள் தொகை

அடர்த்தி

7,86,000 (2001)

4,292/km2 (11,116/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

200.23 கிமீ2 (77 சதுர மைல்)

670.75 மீட்டர்கள் (2,200.6 ft)

ஹூப்ளி (Hubli) அல்லது ஹூப்பள்ளி, (தமிழ்: பூப்பள்ளி) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஓர் முதன்மை நகரமாகும். ஹூப்பள்ளி என்ற பெயர் கன்னட மொழியில் பூக்கும் கொடி என்ற பொருளைத் தருவதாகும். இதன் இரட்டை நகரான தார்வாடுடன் இணைந்த "ஹூப்ளி-தார்வாட்", கர்நாடகத்தில் பெங்களூருவிற்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரும் நகரப்பகுதியாகும். தார்வாட் நிர்வாகத் தலைநகராக விளங்குகையில் தார்வாட்டுக்கு தென்கிழக்கே 22 கிமீ தொலைவில் உள்ள ஹூப்ளி வணிக மையமாகவும் வட கர்நாடகத்தின் தொழில் முனையமாகவும் விளங்குகிறது. இதன் பின்புல நிலப்பகுதியில் பருத்தியும் நிலக்கடலையும் கூடுதலாக வேளாண்மை செய்யப்படுகின்றன. இந்திய இரயில்வேயின் முக்கிய சந்திப்பாக விளங்கும் ஹூப்ளியில் தென்மேற்கு இரயில்வே மண்டலம் மற்றும் ஹூப்ளி கோட்டத்தின் தலைநகராக விளங்குகிறது. மாநிலத்தலைநகர் பெங்களூருவிலிருந்து வடமேற்கே 425 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 4 இல் அமைந்துள்ளது. ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி நகர நிர்வாகத்தை பேணுகிறது.ஹூப்ளி 'சிறிய மும்பை' என அழைக்கப்படுகிறது.

மக்கள்தொகையியல்[தொகு]

2001ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இரட்டை நகரத்தின் மக்கள்தொகை 786,000 ஆக இருந்தது. இது 2011 ஆண்டு 1200,000ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு கன்னடம் முதன்மை மொழியாக விளங்குகிறது. மராத்தியும் கொங்கணியும் உருதும் அடுத்தநிலையில் பேசப்படுகின்றன.

காலநிலை[தொகு]

தட்பவெப்பநிலை வரைபடம்
ஹூப்ளி
பெமாமேஜூஜூ்செடி
 
 
0.0
 
29
15
 
 
0.0
 
32
16
 
 
10
 
35
19
 
 
40
 
36
21
 
 
60
 
35
21
 
 
150
 
28
21
 
 
210
 
26
21
 
 
200
 
26
20
 
 
110
 
28
20
 
 
60
 
29
19
 
 
30
 
29
17
 
 
0.0
 
28
15
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: YR
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0
 
85
58
 
 
0
 
89
60
 
 
0.4
 
94
65
 
 
1.6
 
97
69
 
 
2.4
 
94
70
 
 
5.9
 
83
70
 
 
8.3
 
79
70
 
 
7.9
 
78
68
 
 
4.3
 
82
67
 
 
2.4
 
85
66
 
 
1.2
 
84
62
 
 
0
 
83
60
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

ஹூப்ளி-தார்வாட் அயனமண்டல ஈரப்பதமிக்க மற்றும் உலர்ந்த காலநிலை கொண்டுள்ளது. பெப்ரவரியின் பிற்காலத்திலிருந்து சூன் முற்பகுதிவரையான வேனில் காலத்தில் வெப்பம் மிகுந்து உலர்ந்த காலநிலையும் தொடரும் பருவக்காற்று காலத்தில் மிகுந்த ஈரப்பதத்துடன் கூடிய மிதமான வெப்ப காலநிலையும் நிலவுகிறது. அக்டோபர் கடைசி முதல் பெப்ரவரி முற்பகுதிவரை இளங்கூதிர் காலத்தில் மழை ஏதுமின்றி மிதமான வெப்ப காலநிலை நிலவுகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவே மிகச்சிறந்த காலமாகும்.

ஹூப்ளி சராசரி கடல்மட்டத்திலிருந்து 626.97 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆண்டு சராசரி மழையளவு 838 மிமீ.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-06-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-07-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூப்ளி&oldid=3362600" இருந்து மீள்விக்கப்பட்டது