அக்கா மகாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அக்கா மகாதேவி

அக்கா மகாதேவி (Akka Mahadevi, கன்னடம்: ಅಕ್ಕ ಮಹಾದೇವಿ) 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கன்னடப் பெண் கவிஞர்[1]. வீர சைவ நெறியைக் கடைப்பிடித்த அக்கா மகாதேவியின் பாசுரங்கள் கன்னட மொழியில் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தன[2]. வசனா எனப்படும் முறையில் எழுதப்பட்ட அக்கா மகாதேவியின் பாசுரங்கள், கன்னட பெரும் கவிகளான பசவன்னா, சென்னா பசவன்னா, கின்னாரி பொம்மையா, சித்தாராமைய்யா, அல்லமாபிரபு, தாசிமைய்யா ஆகியோரின் பாசுரங்களை ஒத்தவையாக இருந்தன. இவர் மொத்தம் 430 வசனா பாசுரங்களை இயற்றினார். இவரின் மீது மக்கள் கொண்ட விருப்பத்தின் காரணமாகவே இவர் "அக்கா" என அழைக்கப்படுகின்றார். சிவனின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அக்கா மகாதேவி, அவரையே தனது உளமார்ந்த கணவனாகப் பாவித்துக்கொண்டார்.

பிறப்பு[தொகு]

அக்கா மகாதேவி, இன்றைய கன்னட மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள உடத்தடி என்ற ஊரில் பிறந்தார்[3]. 25 வயது வரை மட்டுமே வாழ்ந்தார் என நம்பப்படுகின்றது. இதைத் தவிர இவரது பிறப்பு, இறப்பு, வயது, இளமைப்பருவம் பற்றிய வேறு சரியான தகவல்கள் இல்லை.

நம்பிக்கைகள்[தொகு]

Akkamahadevi Udathadi1.JPG

12ம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட பெண் கவி இவர் ஒருவரே என நம்பப்படுகின்றார். தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இறைவன் சிவனுக்காக ஈன்ற இவர், சமூகங்களில் நிலவும் போலியான சமயச் சடங்குகளை வெறுத்தார். உலக வாழ்வைத் துறந்த துறவு வாழ்வின் மூலம் கடவுளை அடைய முடியும் என நம்பினார். விலங்குகள், பறவைகள், மலர்கள் போன்றவற்றையே தனது நண்பர்களாக கொண்டார்.

அக்கா மகாதேவி, சிறு வயது முதலே சிவனடியாராக இருந்ததால் கடைசிவரை திருமணம் செய்யவில்லை என நம்பப்படுகின்றது. துறவியாக மாற விரும்பி, அதன் முதல் படியான அம்மண நிலையை ஏற்கக் கலங்கியபொழுது இறைவன் இவரின் உடல் முழுவதும் மயிர்க்கற்றைகள் வளரும் படி செய்து கூச்சத்தைப் போக்கியதாகவும் நம்பப்படுகின்றது.

ஆனால் ஒரு சாரார் அக்கா மகாதேவிக்கு சிறு வயதிலேயே பெற்றோர்களால் திருமணம் நடத்திவைக்கப்பட்டது என கூறுகின்றனர்[4]. இவரது கணவர் பெயர் கவுசிகா எனவும், இவர் ஒரு குறுநில மன்னர் எனவும் கூறப்படுகின்றது. கவுசிகா சமண சமயத்தை பின்பற்றியவர் என்பதனாலேயே அக்கா மகாதேவி இவரிடம் இருந்து பிரிந்து துறவறம் மேற்கொண்டதாக கூறுகின்றனர்.

மறைவு[தொகு]

அக்கா மகாதேவி இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள சிறிசைலத்தில் இறைப் பேரொளியுடன் கலந்து மகாசமாதியாகிவிட்டதாக நம்பப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கா_மகாதேவி&oldid=1542405" இருந்து மீள்விக்கப்பட்டது