உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னட இலக்கிய மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னட இலக்கிய மன்றம் (ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯ ಪರಿಷತ್ತು, கன்னட சாகித்திய பரிசத்) என்பது கன்னட மொழியின் வளர்ச்சிக்காக பாடுபடும் தன்னார்வல இயக்கம். இது கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ளது. கன்னட இலக்கிய மாநாடுகளை நிகழ்த்துதல், நூல்களை வெளியிடல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும்.

நோக்கம்

[தொகு]
  • கன்னட மொழி பேசுவோரிடையே ஒற்றுமையை உருவாக்க வலியுறுத்தல்
  • வட்டார வழக்குகளைக் குறைத்து பொதுவான கன்னட வழக்கை உருவாக்குதல்
  • கன்னடம் கற்கும் மாணவர்கள் பொது வழக்கில் உள்ள நூலைக் கற்பதை உறுதி செய்தல்
  • கன்னட மொழி பேசுவோர் இடையே அறிவை வளர்க்க நூல்களை வெளியிடல்
  • பிற மொழிகளில் பயன்படுத்தப்படும் அறிவியல் கலைச்சொற்களுக்கு இணையான கன்னட சொற்களை உருவாக்குதல்

இணைப்புகள்

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னட_இலக்கிய_மன்றம்&oldid=2972092" இலிருந்து மீள்விக்கப்பட்டது