கோலார் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோலார் மாவட்டம்
—  மாவட்டம்  —
கோலார் மாவட்டம்
இருப்பிடம்: கோலார் மாவட்டம்
, கருநாடகம்
அமைவிடம் 13°36′N 77°54′E / 13.6°N 77.9°E / 13.6; 77.9ஆள்கூற்று: 13°36′N 77°54′E / 13.6°N 77.9°E / 13.6; 77.9
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
தலைமையகம் கோலார்
ஆளுநர் Vajubhai Vala
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி கோலார் மாவட்டம்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


கோலார் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கோலார் நகரத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் கோலார் தங்க வயல் உள்ளது. 8,225 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டம் கிழக்கு நில நிரைக்கோடுகள் 77° 21', 78° 35' ஆகியவற்றுக்கு இடையிலும், வடக்கு நில நேர்க்கோடுகள் 120 46', 130 58' ஆகியவற்றுக்கு இடையிலும் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள இந்த மாவட்டமே மாநிலத்தின் கிழக்குக் கோடியில் அமைந்த மாவட்டமாகவும் உள்ளது.

இம்மாவட்டம் மேற்கில் பெங்களூரு நாட்டுப்புறம், தும்கூர் மாவட்டம் ஆகியவையும், வடக்கிலும் கிழக்கிலும் முறையே ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அனந்தபூர், அதே மாநிலத்தைச் சேர்ந்த சித்தூர் ஆகிய மாவட்டங்களும், தெற்கில் தமிழ் நாட்டு மாவட்டங்களான கிருட்ணகிரி, வேலூர் என்னும் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 2,536,069 ஆகும். இங்கே 15 நகரங்களும், 2889 மக்கள் வாழும் ஊர்களும், 432 மக்கள் வாழாத ஊர்களும் உள்ளன.

வட்டங்கள்[தொகு]

இந்த மாவட்டத்தில் கீழ்க்கண்ட வட்டங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலார்_மாவட்டம்&oldid=2228895" இருந்து மீள்விக்கப்பட்டது