உள்ளடக்கத்துக்குச் செல்

உடுப்பி மாவட்டம்

ஆள்கூறுகள்: 13°21′N 74°45′E / 13.35°N 74.75°E / 13.35; 74.75
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடுப்பி
—  மாவட்டம்  —
உடுப்பி
இருப்பிடம்: உடுப்பி

, கருநாடகம்

அமைவிடம் 13°21′N 74°45′E / 13.35°N 74.75°E / 13.35; 74.75
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
நிறுவப்பட்ட நாள் 1997
மிகப்பெரிய நகரம் உடுப்பி
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி உடுப்பி
மக்கள் தொகை 1,112,243 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.udupicity.gov.in/


உடுப்பி மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் உடுப்பி நகரத்தில் உள்ளது. தென் கன்னட மாவட்டத்தில் இருந்து உடுப்பி, குண்டப்பூர், கார்வால் ஆகிய தாலுகாக்களைப் பிரித்து உடுப்பி மாவட்டம் 1997 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,112,243. இதில் 18.55% நகர்ப்புற மக்களாவர்.[1][2][3]

புகழ் பெற்ற மூகாம்பிகை கோயில் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மொழி

[தொகு]

இம் மாவட்டத்தின் முக்கிய மொழிகளாக, துளு, கன்னடம், கொங்கணி ஆகியவை விளங்குகின்றன. உடுப்பி, தென் கன்னடம் ஆகிய மாவட்டங்களில் துளு மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் இவற்றை ஒருசேர "துளு நாடு" எனவும் அழைப்பதுண்டு. இம் மாவட்டத்திலுள்ள பார்க்கூர் என்னும் இடத்தில் பழைய துளு மொழிக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Know India - Karnataka". Government of India. பார்க்கப்பட்ட நாள் 6 December 2010.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 16 June 2004. பார்க்கப்பட்ட நாள் 1 November 2008.
  3. "Table C-16 Population by Mother Tongue: Karnataka". www.censusindia.gov.in. Registrar General and Census Commissioner of India.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடுப்பி_மாவட்டம்&oldid=3889507" இலிருந்து மீள்விக்கப்பட்டது