சரவணபெலகுளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சரவணபெலகுளாவிலுள்ள 57 அடி உயர கோமதீஸ்வர் சிலை

சரவணபெலகுளா என்னும் கன்னடச் சொல்லின் தமிழ் வடிவம் 'சரவண வெள்ளைக்குளம்'.[1][2] சரவணபெலகுளா என்னும் ஊர் பெங்களூரிலிருந்து 158 கிலோமீட்டர் தொலைவில், ஹாசன் மாவட்டத்தில், சந்திரராயன் பட்டினம் என்ற நகருக்கு அருகில் உள்ளது. கி.பி. 978-993 ஆண்டினதாகக் கொள்ளப்படும் கொம்மதேசுவர பாகுபலி எனும் சமண முனியான கோமதீஸ்வர் சிலை 57 அடி உயரம் கொண்டதாக இங்கு உள்ளது. மேலைக் கங்க மன்னரின் அமைச்சரான சந்திரராயன் என்பவரால் பத்தாம் நூற்றாண்டில் இந்தச் சிலை அமைக்கப்பட்டது.

சந்திரகிரி

இக்காலத்தில் கொஞ்சம் நீருடன் தோன்றும் வெள்ளைக்குளம்

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. "சரவணப் பூம் பள்ளி அறை" என்னும் தொடரைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது (24-9-1). 'சரவணப்பூ' என்பது வெண்-தாமரை. வெண்டாமரைக் குளத்தை வெள்ளைக்குளம் என வழங்கி, ‘பெலகுளா’ எனக் கன்னடத்தில் வழங்குகின்றனர்.
  2. முருகன் பிறந்ததாகச் சொல்லப்படும் ’சரவணப் பொய்கை என்பது வேறு. இது "மேரு குன்றத்து ஊரும் நீர்ச் சரவணம்" (மணிமேகலை 18-92) எனக் குறிப்பிடப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவணபெலகுளா&oldid=2735477" இருந்து மீள்விக்கப்பட்டது