உள்ளடக்கத்துக்குச் செல்

பத்திரபாகு (முனிவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்திரபாகு முனிவரும் சந்திரகுப்தரும்
பத்திரபாகு குகை, சரவணபெலகுளா
பத்திரபாகு பாதம், சரவணபெலகுளா

பத்திரபாகு முனிவர் (Bhadrabahu) கிமு.317 முதல் கிமு.297 வரையில் வாழ்ந்த ஒரு சைன முனிவர். இவர் கல்ப சூத்திரம் நூலை இயற்றியவர். தமிழ்நாட்டில் சைன சமயம் அறிமுகமாக இவர் முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது. இவர் மௌரிய அரசன் சந்திரகுப்தனனின் குரு.[1] சந்திரகுப்தர் தனது கடைசி காலத்தில் சைன சமயத் துறவியாகி பெங்களூர் அருகே உள்ள சிரவண பெலகோலாவில் இவர் வழிகாட்டுதலின் கீழ் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இறுதியில் சைன சமயக் கொள்கைப்படி வடக்கிருந்து உயிர்நீத்தார்.[2] இதனாலேயே அங்குள்ள மலைக்கு சந்திர கிரி என்ற பெயர் வந்தது. பத்திரபாகு முனிவரும் அவருடன் வந்த பல முனிவர்களும் வடக்கிருந்து உயிர் நீத்ததை அரிசேனர் என்பவர் இயற்றிய பிருகத்கதா கோசம், தேவசந்திரர் கன்னட மொழியில் இயற்றிய ராஜாவளி கதெ ஆகிய நூல்களின் வழி அறியலாம்.[3]

பத்திரபாகு முனிவர் தம் சீடர்களுள் ஒருவரான வைசாக முனிவர் என்பவரைக் கொண்டு சோழ நாடு மற்றும் பாண்டிய நாடுகளில் சைன சமயக் கெள்கைகளைப் பரவச் செய்தார் என்று அறியப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chandragupta Maurya and His Times By Radha Kumud Mookerji, Published 1966 Motilal Banarsidass Publ.
  2. The Sacred ʹSravaṇa-Beḷagoḷa: A Socio-religious Study By Vilas Adinath Sangave, Published 1981, Bharatiya Jnanpith
  3. Dravya-saṃgraha of Nemichandra Siddhānta-Chakravarttī - ஆங்கில நூல்
  4. தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்திரபாகு_(முனிவர்)&oldid=3644705" இலிருந்து மீள்விக்கப்பட்டது