பாண்டிய நாடு
பாண்டிய நாடு (Pandya Nadu) என்பது தென்னிந்தியாவின் பண்டைய பகுதிகளுள் ஒன்றாகும். இந்த பாண்டிய நாடு மதுரை, தேனி, திண்டுக்கல்,சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட இன்றைய தமிழக மாவட்டங்களை உள்ளடக்கியதாடகும்.[1]
கி.மு.நான்காம் நூற்றாண்டில் இருந்தே இந்த பகுதிகள் பாண்டியர் வம்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பாண்டியர் ஆட்சியில் கலாச்சார மற்றும் அரசியல் மையமாக செயல்பட்டது மதுரை நகரமாகும். பாண்டியர்கள் ஆட்சிகாலத்தில், மதுரையே தலைநகராக இருந்தது. இது இந்தியப் பெருங்கடல் வழியாக மேற்கு மற்றும் கிழக்கு ஆசியாவிற்கிடையேயான வர்த்தகத்தில் ஈடுபட்டதோடு கேரளா மற்றும் இலங்கையுடன் நெருங்கிய கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைக் கொண்டிருந்தது.
பின்னாளில் பாண்டியர்களின் தலைநகராக விளங்கியது மதுரை அல்லது கன்னியாகுமரி என்று அறியலாகின்றது. 15 ஆம் நூற்றாண்டிலே இப்பகுதியானது, விஜயநகரப்பேரரசின் ஆட்சி கீழ் வந்தது. 16ஆம் நூற்றாண்டிலே விஜயநகரப்பேரரசு வீழ்ந்தது முதலாக, 17ஆம் நூற்றாண்டிலே, பிரிட்டானியர்கள் கைப்பற்றும் வரை மதுரை நாயக்கர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். பின்னர் 8 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி மதராஸ் மாகாணத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், மதராஸ் மாகாணம் 'மதராஸ் மாநிலம்' என மாறியது. பின்னர் அது "தமிழ்நாடு" என மறுபெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Pandiya Nadu". டிசம்பர் 25, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. December 26, 2017 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)