கடுங்கோன் (இடைக்காலம்)
கடுங்ககோ அல்லது கடுங்கோன், களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவான். கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான். பாண்டிய நாடு முழுவதனையும் தன் ஆட்சிக்குள் கொண்டும் வந்தான். இவனது ஆட்சி கி.பி.575 முதல் 600 வரை நீடித்ததாகக் கருதப்படுகின்றது[1]. இவனைப் பற்றிய செய்திகள் பலவற்றையும் வேள்விக்குடி செப்பேடுகள் சிறப்பித்துக் கூறுகின்றன அவையாவன:-
“ | களப்பிரன் என்னும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடன் முளைத்த பருதிபோல் |
” |
இப்பாடல் வரிகள் களப்பிரன் பாண்டிய நாட்டைக் கைக்கொண்டான், கதிரவன் போன்ற பாண்டியன் ஒடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்றும், கதிர்வேல் தென்னன் என்றும், செங்கோல் ஓச்சியவன் என்றும் உலகப் பெண் உரிமையைத் தனதாக்கிக் கொண்டவன் என்றும் சிறப்பிக்கப்படுகின்றான். வீரத்தால் களப்பிரரை வென்றான் புகழால் தமிழை நிலைபெற வைத்தான் எனவும் மெய்ச்சப்படுகின்றான்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ "4.2.1 பாண்டியன் கடுங்கோன் (கி.பி. 575-600)". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2015.