அமர புயங்கன்
Appearance
அமர புயங்கன் கி.பி. 930 முதல் 945 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் ஆட்சி புரிந்த வேளையிலே சோழ மன்னனான முதலாம் இராசராச சோழன் சேர நாட்டின் மீது படையெடுத்திருந்தான் அச்சமயம் வழியில் எதிர்த்த அமர புயங்கனை போரில் தோற்கடித்தான்[1] என திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது. முதலாம் இராசராசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியதன் பின்னர் சோழ நாட்டினையும் பாண்டிய நாட்டுடன் இணைத்து ராசராச மண்டலம் எனப் பெயரிட்டு ஆட்சி புரிந்தான்.[2] அமர புயங்கன் ஆட்சிக் காலத்தில் இவனது தலைமையின் கீழ் பல குறுநில மன்னர்கள் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.