உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டிய மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப்பெருவழுதி பெரும்பெயர் வழுதி
கடைச்சங்க காலப் பாண்டியர்
முடத்திருமாறன் மதிவாணன்
பசும்பூண் பாண்டியன் பொற்கைப்பாண்டியன்
இளம் பெருவழுதி அறிவுடை நம்பி
பூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
உக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி
நல்வழுதி குறுவழுதி
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன் பொ.ஊ. 575-600
அவனி சூளாமணி பொ.ஊ. 600-625
செழியன் சேந்தன் பொ.ஊ. 625-640
அரிகேசரி பொ.ஊ. 640-670
இரணதீரன் பொ.ஊ. 670-710
பராங்குசன் பொ.ஊ. 710-765
பராந்தகன் பொ.ஊ. 765-790
இரண்டாம் இராசசிம்மன் பொ.ஊ. 790-792
வரகுணன் பொ.ஊ. 792-835
சீவல்லபன் பொ.ஊ. 835-862
வரகுண வர்மன் பொ.ஊ. 862-880
பராந்தகப் பாண்டியன் பொ.ஊ. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன் பொ.ஊ. 900-945
அமர புயங்கன் பொ.ஊ. 930-945
சீவல்லப பாண்டியன் பொ.ஊ. 945-955
வீரபாண்டியன் பொ.ஊ. 946-966
வீரகேசரி பொ.ஊ. 1065-1070
மாறவர்மன் சீவல்லபன் பொ.ஊ. 1132-1162
சடையவர்மன் சீவல்லபன் பொ.ஊ. 1145-1150
பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் பொ.ஊ. 1150-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் பொ.ஊ. 1175-1180
விக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் பொ.ஊ. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் பொ.ஊ. 1238-1239
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1239-1251
சடையவர்மன் விக்கிரமன் பொ.ஊ. 1241-1254
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் பொ.ஊ. 1251-1281
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பொ.ஊ. 1276-1293
தென்காசிப் பாண்டியர்கள்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் பொ.ஊ. 1473-1506
குலசேகர பாண்டியன் பொ.ஊ. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் பொ.ஊ. 1534-1543
பராக்கிரம குலசேகரன் பொ.ஊ. 1543-1552
நெல்வேலி மாறன் பொ.ஊ. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் பொ.ஊ. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் பொ.ஊ. 1588-1612
வரகுணராம பாண்டியன் பொ.ஊ. 1613-1618
தொகு

குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது. மூத்த குடும்பன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.[1] ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.எங்கும் நீர் சூழ்ந்தது.பூமியில் நிலப்பரப்பு இல்லை.சூரியன் கதிர்கள் பட்டு நிலபரப்பு உருவாகி மனிதவர்க்கம் உருவாக ஆரம்பித்தது. அது, ஒரு பாண்டிய மன்னரான சத்தியவிரத பாண்டியன் மற்றும் சப்தரிஷிகள் மூலிகைகள் என காக்கப்பட்டு பகவான் மச்ச அவதாரம் இன்று இருந்துவரும் இந்து மகா சமுத்திரத்தில் நிகழ்ந்தது.அந்த ஒரு பாண்டியனின் பெயர் சத்யவிரத பாண்டியன். இவனே,பிரளயம் முடிந்து பின்னாளில், 7- வது மநுவாக நியமிக்கப்பட்டார்.

வேள்விக்குடிச் செப்பேட்டில்.

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில்

இவனைப் பற்றிப் புறநானூற்றில் "முதுகுடுமிப் பெருவழுதி ஆற்றல் மிக்க படையோன்;அரசர் பலரையும் புறங்கண்டவன்;புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்துச் சிறந்தவன்;இரவலர்க்கு இல்லையெனாது ஈயும் பெருங்கொடையான்;வேள்வி பல செய்து புகழ் பெற்றவன்;சிவ பெருமானிடத்து பேரன்பு உடையோன்;பெரியோர்களை மதிப்பவன்" (புறம்-6,9,12,15,64)

காரிக்கிழார் பெருவழுதியைப் பற்றிப் பாடுகையில்

நெட்டிமையார் இவனைப் பற்றிப் பாடுகையில்

மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு "விறல் மாண்குடுமி பிறர் மண்கொண்டு பாணர்க்குப் பொன் தாமரையும்,புலவர்க்கு யானையும்,தேரும் பரிசாக நல்கினான்" எனப் புறம்-12 கூறுகின்றது.

நால்வேதங்கூறியாங்கு "வியாச் சிறப்பின் வேள்ளி முற்றச் செய்தான்" எனப் புறம்-15 இல் நெட்டிமையார் கூறுகின்றார். இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் காரிக்கிழார், பெண்பாற் புலவர் நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் முதலியோர் இவ்வரசனைப் பாடியுள்ளார்கள்.

இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்:

பாண்டியன் பல்யாகசாலை முதுமுடுமிப் பெருவழுதி

[தொகு]

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவர்.

காலநிரல்

[தொகு]

இவனது வரலாற்றைத் திரட்டிப் பார்க்கும்போது காலநிரல் ஒன்று தெளிவாகிறது.

  1. பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி
  2. நிலந்தரு திருவின் நெடியோன்
  3. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

வழுதி 5 பேர்

[தொகு]

வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர்.
அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும் இவை.

  1. வழுதி – கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3
  2. வழுதி – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 21
  3. வழுதி – கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 51, 52,
  4. வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64,
  5. வழுதி - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.

வழுதிக்கு அறிவுரை

[தொகு]

‘தண்டா ஈகைத் தகைமாண் வழுதி’ எனப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போற்றப்படுகிறார். இவரது வெற்றிகளைப் பாராட்டிய காரிகிழார் இவருக்குக் கூறும் அறிவுரைகள் எண்ணத்தக்கன.

  • ஞமன் என்னும் யமனின் தெரிகோல் போல் ஒருதிறம் சாயாமல் நடுவுநிலைமையைக் கைக்கொள்க.
  • நன்கலம் பரிசில் மாக்கட்கு வரிசையுடன் நல்குக.
  • சிவன் திருவிழாக் காலத்தில் தெருவில் உலா வரும்போது உன் குடை பணியட்டும்.
  • நான்மறை முனிவர் கையேந்தும்போது நீ தலை வணங்குக.
  • பகைவர் நாட்டைச் சுடும் புகையில் நின் மாலை வாடுக.
  • மகளிர் கண்ணீர் வடிக்கும்போது உன் சினம் ஓடி மறைக [2]

போரில் அறத்தாறு கடைப்பிடித்தவன்

[தொகு]

போரில் அறத்தாற்றைக் கடைப்பிடித்தவன் இந்தப் பாண்டியன்
'போர் தொடுக்கப்போகிறேன். ஆனிரை, ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள், பெண்டிர், பிணியுடையவர், மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள்' என முன்கூட்டியே அறிவித்தல் போர்அறம்.
இப்படிப்பட்ட அறநெறியாளன், கடலில் விழாக் கொண்டாடிய நெடியோன் நாட்டில் பாயும் பஃறுளி ஆற்று மணலைக்காட்டிலும் பல்லாண்டு வாழ்க.[3]

வெற்றித்தூணும் வேள்வித்தூணும் நாட்டியவன்

[தொகு]

நின்னோடு போரிட்டுத் தோற்றவர் பலரா? (அப்போது நீ நாட்டிய வெற்றித்தூண் பலவா?)
அல்லது நால்வேத நெறியில் நெய் ஊற்றிச் செய்த வேள்விக்காக நட்ட தூண் பலவா?
யா பல என வினவி அவனது ஆட்சியைப் படம்பிடிக்கிறார்.[4]

போர்க்களத்திலும் கொடை வழங்குபவன்

[தொகு]

குடுமிக்கோமான் போர்களத்தில் இருக்கும்போதும் விறலியர்க்குக் கொடை வழங்கும் பண்புள்ளவன்.[5]

புலவர்களைப் புணர்கூட்டு என்னும் பெயரில் கூட்டிச் சங்கம் நிறுவியவன்.

[தொகு]

நிலந்தரு திருவின் நெடியோன் என்னும் பாண்டியன் தொல்லாணை நல்லாசிரியர்களைக் கூட்டி புலவர்களின் புணர்கூட்டு(சங்கம்) என்னும் நல்வேள்வி செய்தான். இதில் கூட்டப்பட்ட நல்லாசிரியர்கள் பல்சாலை முதுகுடுமியால் முன்பே ஒருங்கிணையக் கூட்டப்பட்டவர்கள்.[6]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
  2. காரிகிழார் – புறம் 6
  3. நெட்டிமையார் – புறம் 9
  4. நெட்டிமையார் புறம் 15
  5. நெடும்பல்லியத்தனார் – புறம் 64
  6. பல்சாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போலத் (தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விளங்கினானாம். மாங்குடி மருதனார் - மதுரைக்காஞ்சி 759-765

வெளிப்பார்வை

[தொகு]