செழியன் சேந்தன்
செழியன் சேந்தன் கி.பி. 625 முதல் 640 வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனாவான்[1]. அவனி சூளாமணியின் வழித்தோன்றலும் ஆவான். சடையவர்மன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த இவனே இப்பட்டத்தினை முதன் முதலில் பெற்றவனும் ஆவான். இம்மன்னன் சேரர்களை வென்றதால் வானவன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான்[1].
இம்மன்னனது பெயரால் இவன் ஆட்சியில் கொங்கு நாடு இருந்தது. இவன் பெயரால் அமைந்த ஊர்தான் கொங்கு நாடான கொல்லிக் கூற்றத்துச் சேந்தன் மங்கலம் ஆகும். இவன் காலத்தில் சீனநாட்டு யாத்ரீகனான யுவான் சுவாங் தமிழகத்திற்கு வந்து காஞ்சி சென்று, பின் பாண்டிய நாட்டிற்குச் சென்றிருந்தான். செழியன் சேந்தனைப் பற்றி "பாண்டியன் சேந்தன் இறந்து விட்டான். அதனால் பாண்டி நாடு பஞ்சத்தால் வாடுகிறது' என்று தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்[1].
வேள்விக்குடிச் செப்பேடு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“ | சிலைத்தடக்கைக் கொலைக் களிற்றுச் செழியன் மண் மகளை மறுக்கடித்த வேந்தர் வேந்தன் செங்கோல் சேந்தன் |
” |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "4.2.2 மாறவர்மன் அவனி சூளாமணியும் அவனது மகனும் (கி.பி. 600-640)". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். Retrieved 18 சூலை 2015.