மாறவர்மன் சீவல்லபன்
Appearance
மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.கி.பி. 1132 ஆம் ஆண்டு முடிசூடிய இவனது மெய்க்கீர்த்திகள் "பூமகள் சயமகள் பொலிவுடன் தழைப்ப" எனத் தொடங்கும்.திருவாதாங்கூர் சேரன் வீரரவிவர்மன் இவனிடன் திறை பெற்றான்.மாறவர்மன் சீவல்லபனைப் பற்றிய கல்வெட்டுக்கள் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பல ஊர்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.