அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்
Appearance
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473 முதல் 1506 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவார். மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மகனும் ஆவார். புதுக்கோட்டை செப்பேடு இம்மன்னனிற்கு அபிராமபராக்கிரம பாண்டியன்,ஆகவராமன் என இரு தம்பிமார் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றது.இவர் காலத்திலேயே குலசேகர பாண்டியனும் கி.பி. 1479 முதல் 1499 வரை ஆட்சி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.