தூத்துக்குடி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தூத்துக்குடி மாவட்டம்
TN Districts Tuttukkudi.gif
தலைநகரம் தூத்துக்குடி
மிகப்பெரிய நகரம் தூத்துக்குடி
மாவட்ட ஆட்சித் தலைவர்

எம்.ரவிக்குமார் இஆப
காவல்துறைக் கண்காணிப்பாளர்

ஆக்கப்பட்ட நாள்
பரப்பளவு 4,745 km2 (1,832 sq mi)
மக்கள் தொகை
(கணக்கெடுப்பு வருடம்)
அடர்த்தி
வருவாய் கோட்டங்கள் 3
வட்டங்கள் 8
மாநகராட்சி 1
நகராட்சிகள் 2
பேரூராட்சிகள்
ஊராட்சி ஒன்றியங்கள் 12
ஊராட்சிகள்
இணையதளம் http://thoothukudi.nic.in/
http://tnmaps.tn.nic.in/district.php
பின்குறிப்புகள்


தூத்துக்குடி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் தூத்துக்குடி ஆகும். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளை பிரித்து 1985-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மேற்கே திருநெல்வேலி மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடா கடலும், வடக்கே இராமநாதபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது.

வருவாய்க் கோட்டம்[தொகு]

இம்மாவட்டம் வருவாய்த்துறை அமைப்பில்

 1. திருச்செந்தூர்
 2. கோவில்பட்டி
 3. தூத்துக்குடி

ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

வட்டம்[தொகு]

இம்மாவட்டத்தில் வருவாய்த்துறை அமைப்பில் கீழ்காணும் 8 வட்டங்கள் உள்ளன.

 1. எட்டயபுரம்
 2. கோவில்பட்டி
 3. ஒட்டப்பிடாரம்
 4. சாத்தான்குளம்
 5. ஸ்ரீவைகுண்டம்
 6. தூத்துக்குடி
 7. திருச்செந்தூர்
 8. விளாத்திகுளம்

உள்ளாட்சி அமைப்புகள்[தொகு]

இம்மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்கள் போன்றவை அமைந்துள்ளன.

மாநகராட்சி[தொகு]

நகராட்சி[தொகு]

 1. காயல்பட்டிணம்
 2. கோவில்பட்டி

ஆகியவை இம்மாவட்டத்தை சேர்ந்த நகராட்சிகள் ஆகும்.

பேரூராட்சிகள்[தொகு]

 1. நாசரேத்

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

 1. தூத்துக்குடி
 2. கருங்குளம்
 3. ஸ்ரீவைகுண்டம்
 4. ஆழ்வார்திருநகரி
 5. திருச்செந்தூர்
 6. உடன்குடி
 7. சாத்தான்குளம்
 8. கோவில்பட்டி
 9. ஒட்டப்பிடாரம்
 10. கயத்தார்
 11. புதூர்
 12. விளாத்திகுளம்

ஆகியவை இம்மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் ஆகும்.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த நான்கு தொகுதிகளில் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்த விவரம்:

 1. கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி) - கடம்பூர் செ. ராஜூ - அ.இ.அ.தி.மு.க
 2. தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி) - சி.த. செல்லப்பாண்டியன் - அ.இ.அ.தி.மு.க
 3. விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி) - ஜி. வி. மார்க்கண்டேயன் - அ.இ.அ.தி.மு.க
 4. ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி) - எஸ்.பி. சண்முகநாதன் - அ.இ.அ.தி.மு.க
 5. திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி) - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் - தி.மு.க
 6. ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி) - டாக்டர். கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

 • கழுகுமலை வெட்டுவான் கோவில் சமணர் படுகைகள் நிறைந்தது.
 • தென்னிந்தியாவின் மியாமி எனப்படும் அழகிய கடற்கரையைக் கொண்ட மணப்பாடு, குன்றின் மேலுள்ள திருச்சிலுவை, சவேரியார் குகை, கலங்கரை விளக்கம்.
 • அழகிய சுனையுடன் கூடிய அருஞ்சுனைக் காத்த ஐய்யனார்

கோவில்.

 • வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை பாஞ்சாலங்குறிச்சி.
 • எட்டயபுரம் அரண்மனை, பாபாரதியார் இல்லம்.

மாவட்டத் திருவிழாக்கள்[தொகு]

 • THIRUCHENDUR MURUGAN TEMPLE UTSAV(FEB)
 • குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா (அக்டோபர்)
 • ஏரல் சேர்மன் அருணாச்சலம் சுவாமி கோவில் விழாக்கள் (ஆகஸ்ட்)
 • வெள்ளப்பட்டி அதிசய கடல் மாதா கோவில் திருவிழா (மே)
 • தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா (ஆகஸ்ட்)
 • புளியம்பட்டி புனித அந்தோணியார் திருவிழா (மே)
 • வீரபாண்டிய கட்டபொம்மன் விழா (ஜனவரி)
 • பாரதியார் விழா (செப்டம்பர், டிசம்பர்)
 • புனித சவேரியார் திருவிழா- மணப்பாடு (செப்டம்பர்)
 • பேயன்விள பொன்மடசாமி திருக்கோயில் திருவிழா (புரட்டாசி)
 • பசுவந்தனை கைலாசநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்

முக்கிய இடங்கள்[தொகு]

தூத்துக்குடி[தொகு]

நெல்லையிலிருந்து மிக அருகிலுள்ள தூத்துக்குடி மிகச்சிறந்த இயற்கைத் துறைகமாகும். இங்குதான் பிரபல ஸ்பிக் உரத்தொழிற்சாலை உள்ளது. முத்துக்குளித்தலுக்கு பெயர் பெற்ற இடமான தூத்துக்குடியிலிருந்து அண்டை நாடான இலங்கைக்கு படகிலேயே சில மணிநேரங்களில் சென்றுவிடலாம். தூத்துக்குடி உப்புஉற்பத்தி மற்றும் மீன்வளத்தில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது.

ஸ்ரீவைகுண்டம்[தொகு]

இங்கு விஷ்ணுவின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது வைகுண்டபதி சாமி கோவில். இங்கு யானைக்கால் மண்டபம், தமிழ்நாட்டின் மிகப்பிரசித்தி பெற்ற பண்டிகையான வைகுண்ட ஏகாதசியன்று மக்கள் தங்கள் பிரார்த்தனையை செலுத்தும் மண்டபம் ஆகியவை இக் கோவிலில் உள்ளன.

ஒட்டப்பிடாரம்[தொகு]

விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் இங்குதான் பிறந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட இவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுகிறார்.வீரபாண்டிய கட்டபொம்மன் , ஈகி சுந்தரலிங்கனார் போன்ற விடுதலைப்போராட்ட வீரர்கள் வாழ்ந்து மறைந்த இடம் .

குலசேகரபட்டினம்[தொகு]

திருச்செந்தூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குலசேகரப்பட்டினத்தில் செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடைபெறும் தசரா பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இப்பண்டிகையில் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் இங்கு கூடி இப்பண்டிகையை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

திருச்செந்தூர்[தொகு]

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது ஆயிரக்கணக்கில் கூடும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எட்டயபுரம்[தொகு]

புரட்சிக்கவிஞர் பாரதியாரின் பிறந்த இடமான எட்டையாபுரம் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இதே ஊரில்தான் இஸ்லாமியக் கவிஞர் உமறுப்புலவரும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு பாரதியார் பிறந்த இல்லம், பாரதியார் மணிமண்டபம் ஆகியவை தமிழக செய்தி-மக்கள் தொடர்புதுறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பாஞ்சாலங்குறிச்சி[தொகு]

17 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த ஊரில் இருந்து கொண்டுதான் ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்த இடம் மிகச்சிறந்த வரலாற்றுச் சிறப்பிடமாக போற்றப்படுகிறது.இங்கு 1974 ல் தமிழக அரசால் கட்டபொம்மன் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டைக்கு அருகில் ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்ட கோட்டை தோண்டி எடுக்கப்பட்டு முள்வேலி போடப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]