சிவகங்கை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்ட வரைபடம்
தலைநகரம் சிவகங்கை
மிகப்பெரிய நகரம் காரைக்குடி
ஆட்சியர்
ச. மலர்விழி இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

டி. ஜெயச்சந்திரன் (இ.கா.ப)
பரப்பளவு 4,189 km2 (1,617 sq mi)
மக்கள் தொகை
13, 39, 101 (2011ன் படி)
வட்டங்கள் 8
ஊராட்சி ஒன்றியங்கள் 12
நகராட்சிகள் 3
பேரூராட்சிகள் 12
ஊராட்சிகள் 445
வருவாய் கோட்டங்கள் 2
வருவாய் கிராமங்கள் 521
சிவகங்கை மாவட்ட இணையதளம் www.sivaganga.tn.nic.in
www.tnmaps.tn.nic.in

சிவகங்கை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். சிவகங்கை இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். காரைக்குடி இம்மாவட்டத்தின் பெரிய நகரமாகும். தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிவகங்கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[சான்று தேவை]

வரலாறு[தொகு]

சிவகங்கை மாவட்டமானது 1984 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பிரித்து சீவகங்கை சீமை மாவட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டமானது மார்ச்சு 15, 1985ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இது 1997 இல் சிவகங்கை மாவட்டம் என்ற பெயர் மாற்றம் பெற்றது.

எல்லைகள்[தொகு]

இம்மாவட்டத்தின் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், வடக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தென் கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தென் மேற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

சிவகங்கை அரண்மனையின் வெளித்தோற்றம்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 1,339,101 ஆகும். பாலின விகிதமானது 1,000 ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதமாக உள்ளது.[1]

நிர்வாகம்[தொகு]

வட்டங்கள்[தொகு]

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

சிவகங்கை மாவட்டம் 8 வருவாய் வட்டங்களை உள்ளடக்கியது.

வருவாய் கோட்டம் வட்டங்கள் வருவாய் கிராமங்கள்
சிவகங்கை கோட்டம் 5 சிவகங்கை, காளையார்கோவில்,மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் 267
தேவகோட்டை கோட்டம் 3 தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் 255
மொத்தம் 8 521

மக்களவைத் தொகுதிகள்[தொகு]

தொகுதி தற்போதைய உறுப்பினர் கட்சி
சிவகங்கை செந்தில்நாதன் அதிமுக

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

தொகுதி எண் தொகுதி தற்போதைய உறுப்பினர் கட்சி
184 காரைக்குடி கே. ஆர். இராமசாமி இ.தே.கா
185 திருப்பத்தூர் பெரிய கருப்பன் திமுக
186 சிவகங்கை பாஸ்கரன் அதிமுக
187 மானாமதுரை மாரியப்பன் கென்னடி அதிமுக

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்[தொகு]

வேட்டங்காடு பறவைகள் சரணாலயம்[தொகு]

செட்டிநாடு[தொகு]

முதன்மைக் கட்டுரை: செட்டிநாடு
வாழை இலையில் பரிமாறப்பட்ட செட்டிநாட்டு உணவு

பாண்டியர் கோயில்கள்[தொகு]

இதர சுற்றுலாத் தலங்கள்[தொகு]

  • அழகமாநகரி அருள்மிகு ஸ்ரீ அழகிய நாயகி அம்மன் கோவில்
  • அழகமாநகரி ஸ்ரீ சந்தி வீரண் கோவில்
  • திருமலை மலை கொழந்து ஈஸ்வர் கோவில்
  • நாமனூர் லெட்சுமிபுரம் ஸ்ரீ கரடிசாமி கோவில்
  • நா. லெட்சுமிபுரம் ஸ்ரீ சேவுக பெருமாள் கோவில்

கல்வி நிறுவனங்கள்[தொகு]

பல்கலைக் கழகங்கள்[தொகு]

கல்லூரிகள்[தொகு]

ஆய்வகம்[தொகு]

குறிப்பிடத்தக்க இம்மாவட்டத்தவர்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

காளையார்கோயில் காளீஸ்வரர்கோயிலின் வெளித்தோற்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census Info 2011 Final population totals". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India (2013). பார்த்த நாள் 26 January 2014.

வெளி இணைப்பகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகங்கை_மாவட்டம்&oldid=2555644" இருந்து மீள்விக்கப்பட்டது