கே. ஆர். பெரியகருப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. ஆர். பெரியகருப்பன்
தமிழக ஊரகவளர்ச்சி அமைச்சர்
தொகுதி திருப்பத்தூர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
07 மே 2021
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
தமிழக குடிசை மாற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர்
பதவியில்
13 மே 2006 – 21 மே 2006
முதலமைச்சர் மு. கருணாநிதி
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர்
பதவியில்
21 மே 2006 – 16 மே 2011
முதலமைச்சர் மு. கருணாநிதி
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 30, 1959 (1959-12-30) (அகவை 62)
அரளிக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) பிரேமா
பிள்ளைகள் பி. ஆர். கருத்தன்
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி வழக்கறிஞர்

கே. ஆர். பெரியகருப்பன் (K.R.Periyakaruppan) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி, மற்றும் தமிழக இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சரும், தற்போதைய ஊரக வளர்சித் துறை அமைச்சருமாவார். இவர் அரளிக்கோட்டையில் 30-திசம்பர்-1959இல் பிறந்தவர். இவர் இளநிலை பட்டமாக வணிகம் மற்றும் சட்டம் படித்தவர்.[1] இவர் தமிழக சட்டமன்றத்துக்கு திருப்பத்தூர் சட்டப் பேரவை தொகுதியல் இருந்து 2006 ஆண்டு தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2] பின்னர் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கபட்டார்.

தமிழக சட்டமன்றத்தேர்தல் 2021[தொகு]

தமிழக 16ஆவது சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 6, 2021 அன்று நடைபெற்ற தேர்தலில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு 103682 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதனையடுத்து 07 மே, 2021 அன்று பதவி ஏற்ற தமிழக அமைச்சரவையில் ஊரகத்வளர்ச்சி (ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள்) அமைச்சராகப் பதவியேற்றார்.[3]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 திருப்பத்தூர் திமுக 103682 49.19%[4]
2016 திருப்பத்தூர் திமுக 110719 55.72
2011 திருப்பத்தூர் திமுக 83485 48.25
2006 திருப்பத்தூர் திமுக 44.85

மேற்கோள்கள[தொகு]