உள்ளடக்கத்துக்குச் செல்

பூவந்தி ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவந்தி
—  ஊராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி சிவகங்கை
மக்களவை உறுப்பினர்

கார்த்தி சிதம்பரம்

சட்டமன்றத் தொகுதி மானாமதுரை
சட்டமன்ற உறுப்பினர்

ஆ. தமிழரசி (திமுக)

மக்கள் தொகை 2,958
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


பூவந்தி ஊராட்சி (Poovanthi Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2958 ஆகும். இவர்களில் பெண்கள் 1439 பேரும் ஆண்கள் 1519 பேரும் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்

[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 258
சிறு மின்விசைக் குழாய்கள் 11
கைக்குழாய்கள் 9
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 24
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2
ஊரணிகள் அல்லது குளங்கள் 5
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 59
ஊராட்சிச் சாலைகள் 4
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 10

சிற்றூர்கள்

[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. பூவந்தி
  2. பூவந்தி புதுப்பட்டி
  3. பூவந்தி - ஆதிதிராவிடர் காலனி
  4. மேலப் பூவந்தி
  5. பூவந்தி கீழக் காலனி
  6. கீழப்பூவந்தி
  7. கோட்டைப்பூவந்தி
  8. பாப்பாவலசை
  9. பூவந்தி மேலக் காலனி

சான்றுகள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.
  5. "திருப்புவனம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. Retrieved நவம்பர் 3, 2015.
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved நவம்பர் 3, 2015.
  7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. Retrieved நவம்பர் 3, 2015.

அமைவிடம்:

[தொகு]

வரிச்சியூர் வழியாக, மதுரை - சிவகங்கை செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 33 மற்றும் திருப்புவனம் வழியாக மதுரை - சிவகங்கை செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 85ல் பூவந்தி உள்ளது. பூவந்தி, மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

மதுரை மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்த பூவந்தி அருகில் உள்ள ஊர்கள்: திருப்புவனம் (4 கி.மீ.), வரிச்சியூர் (4 கி.மீ.), லாடனேந்தல் (7 கி.மீ.); அருகமைந்த நகரங்கள் மதுரை (18 கி.மீ.) மற்றும் சிவகங்கை (26 கி.மீ.) ஆகும். பூவந்திக்கு அருகில் உள்ள தொடருந்து நிலையம் மதுரை மற்றும் திருப்புவனம் ஆகும்.

பூவந்திக்கு வடக்கே மேலூர் ஊராட்சி ஒன்றியம், கிழக்கே சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மேற்கே மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் தெற்கே மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

கல்வி நிலையங்கள்

[தொகு]
  • அரசு உயர்நிலைப்பள்ளி, பூவந்தி
  • விக்ரம் பொறியியல் கல்லூரி ஏனாதி
  • ராஸ் அகாடமி -பாப்பான் வலசை ( Rass Academy College Of Nursing )
  • மதுரை சிவகாசி நாடர் பயோனீர் மீனாக்ஷி மகளிர் கல்லூரி ( MSN Women's College Madurai )
  • லிவ்வெல் மறுவாழ்வு  இன்ஸ்டிடியூட் மையம் (Livewell Institute of Rehabilitation Mental )

தொழிற்சாலைகள்

[தொகு]
  • P.R BRICKS
  • GRANITE POLISH FACTORY
  • TVS FARM
  • ஸ்ரீ குமார் மில்ஸ் (தற்போது இல்லை )

அஞ்சூர் நாடு

[தொகு]

சிவகங்கை சீமையில் பூவந்தி

[தொகு]

சீர்மிகு_சிவகங்கைச்_சீமை [1]

பெட்ரோல் பங்க்

[தொகு]

துணை மின் நிலையம்

[தொகு]

வங்கிகள்

[தொகு]

கோயில்கள்

[தொகு]

ஊராட்சி மன்ற தலைவர்கள்

[தொகு]

மருத்துவமனைகள்

[தொகு]

காவல் நிலையம்

[தொகு]


மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011ம் ஆண்டின் மக்கட்தொகை தொகை கணக்கெடுப்பின்படி, பூவந்தி ஊராட்சியின் மொத்த மக்கள்தொகை 3655 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 595 ஆகவுள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]

பூவந்தி

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவந்தி_ஊராட்சி&oldid=4247474" இலிருந்து மீள்விக்கப்பட்டது