பிரவலூர் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரவலூர்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி சிவகங்கை
மக்களவை உறுப்பினர்

கார்த்தி சிதம்பரம்

சட்டமன்றத் தொகுதி சிவகங்கை
சட்டமன்ற உறுப்பினர்

பி. ஆர். செந்தில்நாதன் (அதிமுக)

மக்கள் தொகை 1,117
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பிரவலூர் ஊராட்சி (Piravaloor Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1117 ஆகும். இவர்களில் பெண்கள் 533 பேரும் ஆண்கள் 584 பேரும் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 126
சிறு மின்விசைக் குழாய்கள் 5
கைக்குழாய்கள் 6
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 18
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3
ஊரணிகள் அல்லது குளங்கள் 6
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 112
ஊராட்சிச் சாலைகள்
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2

சிற்றூர்கள்[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. பிரவலூர்
  2. கோகுல கிருஷ்ண நகர்
  3. மாசாத்தியார் நகர்

.

பிரவலூர் எப்படி இந்த பெயர் இந்த ஊருக்கு சூட்டப்பட்டது, தமிழ் இலக்கிய சொற்களின் பெயர் மருவலை ஆதாரமாக வைத்து இந்த ஊருக்கு இந்த பெயர் வந்திருக்கிறது என்று சொல்லலாம்.ஏனெனில் அதன் இயற்கை அமைப்பு மற்றும் பக்கத்து ஊரான ஒக்கூரின் இயற்கை அமைப்பு வேடந்தாங்கல் போல் பறவைகள் பல வாழ்வதற்கு அந்த நூறு பல ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்றதாக இருந்திருக்கிறது.

ஒக்கூருக்கு கொக்கூர் என்பதே உண்மையான பெயர், கொக்கு+ ஊர் மருவி ஒக்கூர் என ஆனது. இது உண்மை.ஏனெனில் ஒக்கூர் கண்மாய் மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டு வெளிகளில் கொக்குகள் மிக அதிக அளவில் காணப்பட்டதால் அந்தக்கால மக்கள் அதனை கொக்கூர் என அழைத்தனர்.

அதேபோல் ஒக்கூரின் வயல்வெளிகளை அடுத்து அமைந்த பிரவலூரில் வடகாடு மற்றும் காட்டு வெளிகளில் பல வகையான பறவைகள் அதிகளவில் பல இருந்தன. பறவை வேட்டைக்கு சென்று பறவைகளைப்பிடித்து உணவாக உட்கொண்டவர்கள் அங்கு குடியிருந்தவர்களை பறவை ஊரார் என அழைக்கலாயினர். அது கொஞ்சம் கொஞ்சமாக மருவி #பறவ+#ஊர் என்று #பறவளூர் ஆகி மீண்டும் வாய் வழக்குச் சொல்லாக மருவி #பெறவ+#ஊர் #பெறவளூர் என்றாகி அரசாங்கப்பதிவேடுகளில் #பிரவலூர் என்று இப்போது இருக்கும் பெயராக உருமாறி விட்டது.பிறகு மக்களிடம் மேலும் வழக்குச்சொல்லாக மருவி #பெறவளி என்று ஆகியிருக்கிறது.அந்த காலத்து முதியவர்கள் என்ன #பெறவளிக்கா போகிறீர்கள் என்று இப்போதும் சொல்வதை கேட்கலாம்.

ஒக்கூருக்கு எத்தனை ஆண்டு வரலாறு,புறநானூற்றுக்கால  இரண்டாயிரம் ஆண்டு முந்தைய வரலாறு இருக்கிறதோ, ஒக்கூர் மாசாத்தியார், ஒக்கூர் முழுமையாக போரில் எரிக்கப்பட்டது போன்ற வரலாறு இருக்கிறதோ அதே போன்ற வரலாறு அதற்கு அடுத்த ஊரான பிரவலூருக்கும் இருக்கிறது.

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. "சிவகங்கை வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவலூர்_ஊராட்சி&oldid=3563521" இருந்து மீள்விக்கப்பட்டது