சிவகங்கை
சிவகங்கை | |
---|---|
ஆள்கூறுகள்: 9°50′36″N 78°28′51″E / 9.843300°N 78.480900°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
பகுதி | பாண்டிய நாடு |
அரசு | |
• வகை | முதல் நிலை நகராட்சி |
• நிர்வாகம் | சிவகங்கை நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | கார்த்தி சிதம்பரம் |
• சட்டமன்ற உறுப்பினர் | பி. ஆர். செந்தில்நாதன் |
• மாவட்ட ஆட்சியர் | ப. மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.97 km2 (2.69 sq mi) |
ஏற்றம் | 124 m (407 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 40,403 |
• அடர்த்தி | 483/km2 (1,250/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 630 561, 630 562 |
தொலைபேசி குறியீடு | 04575 |
வாகனப் பதிவு | TN-63 |
சென்னையிலிருந்து தொலைவு | 460 கி.மீ. (286 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 136 கி.மீ. (85 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 46 கி.மீ. (29 மைல்) |
இராமநாதபுரத்திலிருந்து தொலைவு | 80 கி.மீ. (50 மைல்) |
இணையதளம் | sivaganga |
சிவகங்கை (ஆங்கிலம்:Sivaganga), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது சிவகங்கை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவகங்கையில் சிவகங்கை அரண்மனை, புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் மற்றும் திருப்பத்தூர் காசி விஸ்வநாதர் கோயில் உட்பட பல குறிப்பிடத்தக்க இடங்கள் உள்ளன. இந்த நகரம் அதன் கலாச்சார பாரம்பரியம், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் துடிப்பான திருவிழாக்களுக்கும் புகழ் பெற்றது.
வரலாறு
[தொகு]17 ஆம் நூற்றாண்டின் போது, சிவகங்கையானது இராமநாதபுரம் சமஸ்தானம் இராச்சியத்தால் ஆளப்பட்டது, இதன் எல்லைகள் சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் முழுவதும் பரவியிருந்தது. இப்பேரரசின் ஏழாவது மன்னர் இரகுநாத கிழவன் சேதுபதி 1674 முதல் 1710 வரை ஆட்சி செய்தார், அவருக்குப் பின் அவரது சகோதரியின் மகன் முத்துவிஜயரகுநாத சேதுபதி ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு 1726இல் அவரது மருமகன் சுந்தரேசுவர ரெகுநாத சேதுபதி ஆட்சி செய்தார். ரெகுநாத சேதுபதியின் முறையற்ற மகன் பவானி சங்கரா தேவன், ராம்நாத் இராச்சியதை தாக்க தஞ்சை ராஜாவுடன் இணைந்தார். பவானி சங்கரா தேவன் வென்ற போதிலும், பேரரசின் சில பகுதிகளை தஞ்சை மன்னரிடம் கொடுப்பதாக சொல்லியிருந்த சில பகுதிகளை கொடுக்காமல் மறுத்துவிட்டார். பின்னர் பெரிய உடைய தேவருடன் சண்டையிட்டு அவரைத் தனது மாகாணத்திலிருந்து வெளியே அனுப்பினார். சுந்தரேசுவரனின் சகோதரரான சசிவர்ணா மற்றும் கட்டயா தேவர் இருவரும் தஞ்சையின் ராஜாவுடன் இணைந்தனர். அவர்கள் இருவரும் 1730 இல் பவானியை தஞ்சை படையின் உதவியுடன் தோற்கடித்தனர். கட்டயா தேவர் இராச்சியத்தை ஐந்து மாகாணங்களாகப் பிரித்து, சிவகங்கையின் முதல் மன்னரான சசிவர்ணத் தேவர்க்கு இரண்டு மாகாணங்களைக் கொடுத்தார். பின்னர் சசிவர்ணன் தெப்பக்குளத்தையும், கோட்டையையும் "சிவகங்கை"யைச் சுற்றிக் கட்டினார், அங்கு அவர் தனது ஆன்மீக குரு சதப்பியரை சந்தித்தார். மற்றொரு கூற்றின்படி, சசிவர்ணனை ஆற்காடு நவாப் ராஜாவாக நியமித்தார்.[1] சசிவர்ணன் சுமார் 1750 இல் இறந்தார், அவரது மகன் முத்துவடுகநாத பெரிய உடைய தேவர் ஆட்சியை ஏற்றுக்கொண்டார். இவர் 1780 இல் நவாபின் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் விதவையான வேலு நாச்சியார் மற்றும் கைக்குழந்தையான வெள்ளச்சி ஆகியோர், இருமருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகியோரின் உதவியுடன் இப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் 1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது மற்றும் குயிலி தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி, என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். வேலு நாச்சியார் 1790 வரை இப்பகுதியை ஆட்சி செய்தார். பின்னர் வெள்ளச்சி நாச்சியார் கி.பி 1790 முதல் 1793 வரை ஆட்சி செய்தார். சிவகங்கை நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
புவியியல் மற்றும் பெயர் காரணம்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 9°52′N 78°29′E / 9.87°N 78.48°E ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 102 மீட்டர் (334 அடி) உயரத்தில் இருக்கின்றது.
சிவகங்கை என்ற பெயருக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், சசிவர்ண தேவர் தனது குரு முனிவர் சாத்தப்பையா தியானம் செய்த இடத்திற்கு அருகிலிருந்த நீர் ஊற்றை விரிவு படுத்தி அதை பெரிய அகலமான தெப்பகுளமாக உருவாக்கினார். அக்குளத்திற்கு சிவனது கங்கை என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அக்குளம் மற்றும் அதன் அருகே இருந்த இடம் மற்றும் ஊர் பெயர் மருவி சிவகங்கை எனப் பெயர் பெற்றது. வேரு ஒரு கூற்றில் ஒரு செவ் வேங்கையை சசி வர்ணர் கொன்றதால் செவ் வேங்கை என்ற பெயர் சிவகங்கை என பெயர் வைக்கப்பட்டதாக ஒரு காரணம் உண்டு. தற்போது சிவகங்கை என்ற பெயர் மருவும் தருவாயில் இருக்கிறது ஏனெனில் மக்கள் பலராலும் சிவங்கை அல்லது சிவகங்க என்றே அழைக்கப்படுகிறது வடஇந்தியர்களாள் இவ்வூர் ஷிவ்கங்கா என்றும் அழைக்கப்படுகிறது.[3]
மக்கள் வகைப்பாடு
[தொகு]ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1961 | 15,642 | — |
1971 | 20,826 | +33.1% |
1981 | 24,832 | +19.2% |
1991 | 33,190 | +33.7% |
2001 | 40,403 | +21.7% |
: |
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 40,403 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். சிவகங்கை மக்களின் சராசரி கல்வியறிவு 92.77% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 96.27% மற்றும் பெண்களின் கல்வியறிவு 89.24% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. சிவகங்கை மக்கள் தொகையில் 9.60% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[4]
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, சிவகங்கையில் இந்துக்கள் 84.75%, முஸ்லிம்கள் 10.07%, கிறிஸ்தவர்கள் 4.66%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.01%, 0.49% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் உள்ளனர்.
எல்லைகள்
[தொகு]சிவகங்கை ஆனது சிவகங்கை மாவட்டத்தின் தலைமையகமாகும். இதன் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், வடக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தென்கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தென்மேற்கில் விருதுநகர் மாவட்டமும் மற்றும் மேற்கில் மதுரை மாவட்டமும் ஆகியவை எல்லைகளாக உள்ளன.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- வேலு நாச்சியார்
- மருது பாண்டியர்கள்
- பழனியப்பன் சிதம்பரம்
- முத்துலிங்கம்
- கணியன் பூங்குன்றனார்
- சீமான்
- கஞ்சா கருப்பு
- தா. கிருட்டிணன்
- பேரரசு
- சின்னப்பொண்ணு
- கண்ணதாசன்
- மாறநாயனார்
போக்குவரத்து
[தொகு]பேருந்து போக்குவரத்து
[தொகு]அருகிலுள்ள கிராமங்களையும், சிறிய நகரங்களையும் இணைக்கும் பேருந்துகள் சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. சிவகங்கை சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோயம்புத்தூர் போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.
சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி, மானாமதுரை, திருச்சி, சிவகாசி, அருப்புக்கோட்டை, திண்டுக்கல், பழனி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, ஈரோடு, அறந்தாங்கி, நாகூர், திருவாரூர், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.
தேசிய நெடுஞ்சாலை 85 கொச்சி-மூணார்-போடிநாயக்கனூர்-தேனி-மதுரை நகரம்-சிவகங்கை-தொண்டி, தேசிய நெடுஞ்சாலை 36 விழுப்புரம்-பண்ருட்டி-கும்பகோணம்-தஞ்சாவூர்-புதுக்கோட்டை-திருப்பத்தூர்-சிவகங்கை-மானாமதுரை மற்றும் மாநில நெடுஞ்சாலை 34 ராமநாதபுரம்-இளையான்குடி-சிவகங்கை-மேலூர் ஆகிய சாலைகள் சிவகங்கை வழியாக செல்லும் சாலைகள் ஆகும்.
தொடருந்துப் போக்குவரத்து
[தொகு]சிவகங்கை ரயில் நிலையம் நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, இந்த ரயில் நிலையமானது திருச்சி-ராமேஸ்வரத்தின் ரயில் பாதையில் இணைகிறது. இது சென்னை எழும்பூரை அடைய தென்மாவட்ட ரயில்களுக்கு விருதுநகர் முதல் திருச்சிராப்பள்ளி வரை ஒரு துணை பாதையாக செயல்படுகிறது. பல விரைவு ரயில்களும், பயணிகள் ரயில்களும் இந்த நகரத்தின் வழியாகச் சென்று காரைக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சென்னை எழும்பூர், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர் போன்ற நகரங்களுடன் இணைகின்றன. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருச்சி, திருநெல்வேலி, காரைக்குடி, மயிலாடுதுறை, ராமேஸ்வரம், தஞ்சாவூர் மற்றும் விருதாச்சலம் போன்றவற்றை இணைக்கும் மதுரையிலிருந்து நேரடி ரயில்கள் உள்ளன. இந்தியாவின் முக்கியமான நகரங்களுடன் மதுரை ரயில் நிலையம் இணைப்பைக் கொண்டுள்ளது.
வானூர்தி போக்குவரத்து
[தொகு]மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் 40 கி.மீ தூரத்தில் உள்ளது.
கல்லூரிகள்
[தொகு]- சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. சிவகங்கை நகராட்சியின் புறநகரில் அமைந்துள்ளது.
- அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மானாமதுரை
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
[தொகு]நகராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்ற உறுப்பினர் | பி. ஆர். செந்தில்நாதன் |
மக்களவை உறுப்பினர் | கார்த்தி சிதம்பரம் |
சிவகங்கை நகராட்சியானது சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த பி. ஆர். செந்தில்நாதன் வென்றார்.
வானிலை மற்றும் காலநிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், சிவகங்கை | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 28.6 (83.5) |
30.3 (86.5) |
32.1 (89.8) |
35.8 (96.4) |
37.0 (98.6) |
37.0 (98.6) |
34.9 (94.8) |
33.6 (92.5) |
33.5 (92.3) |
31.7 (89.1) |
30.1 (86.2) |
28.5 (83.3) |
32.76 (90.97) |
தாழ் சராசரி °C (°F) | 23.9 (75) |
23.8 (74.8) |
24.8 (76.6) |
27.1 (80.8) |
27.8 (82) |
27.3 (81.1) |
26.7 (80.1) |
26.3 (79.3) |
26.0 (78.8) |
25.5 (77.9) |
24.7 (76.5) |
24.1 (75.4) |
25.67 (78.2) |
மழைப்பொழிவுmm (inches) | 30.4 (1.197) |
11.5 (0.453) |
18.1 (0.713) |
49.2 (1.937) |
75.1 (2.957) |
47.9 (1.886) |
64.2 (2.528) |
73.4 (2.89) |
91.7 (3.61) |
181.6 (7.15) |
196.5 (7.736) |
91.9 (3.618) |
931.5 (36.673) |
ஆதாரம்: சிவகங்கை காலநிலை[5] |
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]- ப. சிதம்பரம் - தமிழக அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர்
- கணியன் பூங்குன்றனார் - சங்க காலப்புலவர்
- சீமான் - தமிழக அரசியல்வாதி
- கஞ்சா கறுப்பு - தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
- தா. கிருட்டிணன் - தமிழக அரசியல்வாதி
- பேரரசு - தமிழ்த் திரைப்பட இயக்குநர்
- சின்னப்பொண்ணு - நாட்டுப்புற இசைக்கலைஞர்
- கண்ணதாசன் - தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும்
- எச். ராஜா - அரசியல்வாதி, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர்
- சிவகார்த்திகேயன் - தமிழ் திரைப்பட நடிகர்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Iyer, K. Annasawmi (1899). The Sivaganga Zemindary: Its Origin and Its Litigation 1730 to 1899, with a Genealogical Tree. Hoe & Company, Printers.
- ↑ "Sivaganga". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "GK: Sivagangai". GK. பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
- ↑ "2011 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 09, 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Weather statistics for Sivaganga". yr.no. Archived from the original on 5 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 4 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)