வெள்ளச்சி
வெள்ளச்சி நாச்சியார் | |
---|---|
ஆட்சி | கிபி 1790 - 1793[1] |
பின்வந்தவர் | வேங்கன் பெரிய உடையாத் தேவர் |
அரச குலம் | சேது மன்னர் |
தந்தை | முத்து வடுகநாதர் |
தாய் | வேலு நாச்சியார் |
வெள்ளச்சி நாச்சியார் கி.பி 1790 முதல் 1793 வரை சிவகங்கைச் சீமையை ஆண்ட இரண்டாவது அரசி ஆவார்.[1] இவர் முத்து வடுகநாதர் - வேலு நாச்சியார் அவர்களுக்கு 1770ல் மகளாக பிறந்தார் . வெள்ளச்சி நாச்சியார் வயிற்றில் இருக்கும் போது அவரது தந்தை ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு காளையார்கோவில் கோட்டையில் வீீர மரணம் அடைந்தார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இவரது தாயார் வேலு நாச்சியார் ஆங்கிலேய அரசிடமிருந்து மீட்ட சிவகங்கைப் பகுதியை ஆண்டு வந்தார்.[2]
ஆட்சி
1790 ஆம் ஆண்டு வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரை ராணியாக முடி சூட்டினார்
திருமணம்
அந்த ஆண்டே (1790) சிவகங்கைச் சீமையின் நிலக்கிழார்களில் ஒருவரான சக்கந்தி தேவரது மகன் வேங்கன் பெரிய உடையாத் தேவர் அவர்களுக்கு திருமணம் நடந்தது [3]
மரணம்
1791 ஆம் ஆண்டு வெள்ளச்சி நாச்சியார் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது 1793 ஆம் ஆண்டு வெள்ளச்சி நாச்சியார் மற்றும அவரது குழந்தை மர்மமாக இறந்தனர் .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 K. R. Venkatarama Ayyar, Sri Brihadamba State Press, 1938, A Manual of the Pudukkóttai State, p.720
- ↑ "Memorial planned for Velu Nachiyar". The Hindu. 3 November 2012. http://www.thehindu.com/news/national/tamil-nadu/memorial-planned-for-velu-nachiyar/article4059116.ece.
- ↑ எஸ். எம். கமால் (1997). "சீர்மிகு சிவகங்கைச் சீமை". நூல். பசும்பொன் மாவட்ட கலை, இலக்கிய வரலாற்று ஆய்வு மையம்,. p. 112. பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2019.
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link)