அறந்தாங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறந்தாங்கி
—  முதல் நிலை நகராட்சி  —
அறந்தாங்கி
இருப்பிடம்: அறந்தாங்கி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°09′40″N 78°59′46″E / 10.161°N 78.9961°E / 10.161; 78.9961ஆள்கூற்று: 10°09′40″N 78°59′46″E / 10.161°N 78.9961°E / 10.161; 78.9961
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். கணேஷ் இ. ஆ. ப. [3]
நகராட்சி் தலைவர் மீனாள்இளங்கோ
சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி
சட்டமன்ற உறுப்பினர்

இரத்தினசபாபதி (அதிமுக)

மக்கள் தொகை 34,266 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அறந்தாங்கி (ஆங்கிலம்:Aranthangi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பெயர்க்காரணம்

அறந்தாங்கி – பாண்டிய, சோழ அரசுகளின் எல்லையில் இருந்த ஊர், இங்கு கோட்டைகள் கிடையாது நாட்டைக் குறிக்கும் எல்லையாக பெரிய அரண் போன்ற சுவர்கள் கட்டப்பட்டன, அதன் சிதிலங்கள் இப்போதும் அங்கே காணக்கிடைக்கிறது. அரண்+தாங்கி என்று அரண்தாங்கி என்று அழைக்கப்பட்ட ஊர் மருவி இப்போது அறந்தாங்கி என்றாகிவிட்டது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 34,266 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அறந்தாங்கி மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அறந்தாங்கி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அறந்தாங்கி means அறம்+தாங்கி.

பள்ளிகள்[தொகு]

1990 ஆண்டுகளுக்கு முன்பிருந்து செயல் பட்டு வருகின்றன  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி
அரசினர் ஆண்கள் மேல் நிலை பள்ளி
அரசினர் பெண்கள் மேல் நிலை பள்ளி
அலி ஜைனம் ஜமாத் ஒரிஎண்டல் அரபிக் மேல் நிலை பள்ளி

போன்ற பள்ளிகள் மட்டுமே 1990 ஆண்டுகளுக்கு முன்பிருந்து செயல் பட்டு வருகின்றன  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் இன்று மிகுந்து காணப்படுகின்றன  

தனியார் பள்ளிகளும் நிறைந்து காணப்படுகிறான அறந்தாங்கியில்  கலை  கல்லூரிகளும்  ஐ டி ஐ கல்லூரிகளும்  அறந்தாங்கியில்   அருகாமையிலேயே உள்ளன

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறந்தாங்கி&oldid=2682004" இருந்து மீள்விக்கப்பட்டது