உள்ளடக்கத்துக்குச் செல்

திருமெய்யம் குடைவரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருமெய்யம் குடைவரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குன்றின் மேற்பகுதியில் உள்ள குடைவரை
பெருமாள் குடைவரை
சிவன் குடைவரை

திருமெய்யம் குடைவரைகள் என்பவை இந்தியாவின், தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யத்தில் உள்ள குன்றில் காணப்படும் மூன்று குடைவரைகள் ஆகும். இவை 7-8ஆம் நூற்றாண்டில் குடையப்பட்டவை என்று கருதப்படுகின்றன. இவற்றில் ஒன்று, குன்றின் மேற்பகுதியிலும், கீழ்ப்பகுதியில் சிவனுக்கும் திருமாலுக்கும் என இரண்டு குடைவரைகள் அடுத்தடுத்த குடைவரைக் கோயில்களாக உள்ளன.


தமிழ்நாட்டில் பல குடைவரைகள் பள்ளிகொண்ட பெருமாளுக்கு அமைக்கப்பட்டுள்ளன என்றாலும் இங்குள்ள குடைவரையே அளவில் பெரியது. தாய்ப்பாறையில் பள்ளிகொண்ட பெருமாள் செதுக்கபட்டுள்ளார். மேலும் நின்ற நிலையில் ஒரு பெருமாள் வெளியே செதுக்கபட்டு கொண்டுவந்து நிறுவப்பட்டவராகவும் உள்ளார். சிவனுக்கு அமைக்கபட்ட குடைவரையில் தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான படைப்பான இலிங்கோத்பவர் வடிவம் உள்ளது.

வரலாறு

[தொகு]

சமயப்பொறை நோக்குடன் சிவனுக்கும், திருமாளுக்கும் அருகருகே இந்தக் குடைவரைகள் அமைக்கப்பட்டு, வருவாயும் திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் வருவாய் பங்கீட்டில் நேர்ந்த இணக்கமற்ற போக்கால் குழப்பங்களும், சர்ச்சைகளும் தோன்றி கோயில்களில் வழிபாடு நிறுத்தபட்டன. இந்நிலையில் போசளர் ஆட்சிக் காலத்தில் இச்சிக்கலைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளபட்டது. கி. பி. 1245 இல் போசள படைத்தலைவர்களான இரவிதேவர், அப்பண்ணர் ஆகியோர் முன்னிலையில் சுற்றுவட்டார மக்கள் பிரதிநிதிகள், சமயப் பெரியவர்கள் கூட்டம் கூட்டப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வைஷ்ணவ மாகேசுவரம் என்ற ஒப்பந்தம் கையொப்பம் ஆனது. இந்த ஒப்பந்தம் கல்வெட்டாக பதியப்பட்டு அதில் 40 பேர் கையொப்பமிட்டனர்.[1]

ஒப்பந்தத்தின் முதல் பகுதியாக இரு கோயில்களுக்கும் வருவாய் பகிரப்பட்டது. அடுத்து இரு கோயில்களில் எல்லைகள் வரையறுக்கபட்டு, அவற்றை சுவரெடுத்து பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல தங்கள் கோயிலுக்கு சொந்தமான கல்வெட்டு அடுத்த கோயில் பகுதியில் இருந்தால் அவற்றைப் படியெடுத்து தங்கள் கோயில் பகுதியில் செதுக்கிக் கொள்ளவும் ஒப்பந்தம் வழிவகுத்தது. மேலும் கிழக்கில் இருந்த சுனை பெருமாள் கோயிலுக்கும், மேற்கில் உள்ள கிணறு சிவன் கோயிலுக்கும் எனவும் பிரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு பிறகும் அவ்வப்போது இரு கோயில் நிவாகத்திற்கு இடையே அவ்ப்போது சர்ச்சைகள் உண்டானது கல்வெட்டுகள் வழியாக அறியப்படுகிறது.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "திருமெய்யம் ஒப்பந்தம்". 2024-08-11. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமெய்யம்_குடைவரைகள்&oldid=4065503" இலிருந்து மீள்விக்கப்பட்டது