உள்ளடக்கத்துக்குச் செல்

திருமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமயம்
திருமயம்
அமைவிடம்: திருமயம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°14′50″N 78°45′02″E / 10.2471°N 78.750481°E / 10.2471; 78.750481
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி திருமயம்
சட்டமன்ற உறுப்பினர்

சே. இரகுபதி (திமுக)

மக்கள் தொகை 8,350 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

திருமயம் (ஆங்கிலம்: Thirumayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது.[3][4]

பெயர்க்காரணம்

[தொகு]

'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', என்பதை வடமொழியில் 'சத்யஷேத்திரம்' என்ற பெயரில் அழைப்பர். இங்கு கோட்டைக்கு அருகில் இருக்கும் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களான சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது.[5]

மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுந்தருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருமயம் நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

சிறப்புகள்

[தொகு]

இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது. இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம். திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் உள்ள திருமாலை,

“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேந்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே

எனப் பாடியுள்ளார்.

இங்கு ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் பஜனை மடம் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராமர் பட்டாபிசேகம் கொண்டாடப்படுகிறது.

இவ்வூரில் இந்திய விடுதலை வீரரும், பின்னாள் காங்கிரசில் தலைவராயும் இருந்த திரு சத்தியமூர்த்தி அவர்கள் 1887-இல் பிறந்தார்.

பாரத மிகு மின் நிறுவனம் திருமயம்

பாரத மிகு மின் நிறுவனம்: திருமயம் பிரிவு

[தொகு]

திருமயத்தில் பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலக்ட்டிக்கல்ஸ் லிமிடெட்) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது. இது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் 2 ஆகத்து 2013 அன்று திறக்கப்பட்டது. கொதிகலங்களுக்கான குழாய்ப் பகுதிகள் இங்கு தயாரிக்கப்பட உள்ளன.

காட்சியகம்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025". Archived from the original on 2025-09-23. Retrieved 2025-08-22.
  4. 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், தினமலர் 1 சனவரி 2025
  5. origin of the name (etymology) "THE ORIGIN OF THE NAME (ETYMOLOGY)". Sudharsanam, A centre for Arts and Culture, Pudukkottai. Retrieved October 22, 2012. {{cite web}}: Check |url= value (help) [தொடர்பிழந்த இணைப்பு]

இவற்றையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமயம்&oldid=4594873" இலிருந்து மீள்விக்கப்பட்டது