எஸ். ரகுபதி
சே. ரகுபதி | |
---|---|
![]() | |
சட்டத்துறை அமைச்சர் & சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 07 மே 2021 | |
தொகுதி | திருமயம் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2016–2021 | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2021 | |
முன்னாள் இந்திய நடுவண் அமைச்சில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சர் | |
பதவியில் 2004–2007 | |
தொகுதி | புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 30 சூலை 1950 புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | சரோஜா ரகுபதி |
பிள்ளைகள் | மருத்துவர் அண்ணாமலை, முனைவர் கவிதா சுப்பிரமணியன் |
இருப்பிடம் | புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா |
As of 22 செப்டம்பர், 2006 Source: [1] |
சே. ரகுபதி (S. REGUPATHY) (பிறப்பு: 30 சூலை 1950) தமிழக அரசியல்வாதியும், முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சரும், தற்போதைய திருமயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் ஆவார். இவர்த 2004 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்னர் இருந்த புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.[2]
இவர் 2004 ஆம் ஆண்டு முதல் 2007 வரை இந்திய அரசின், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இவர் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் திருமயம் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பி. கே. வைரமுத்துவை தோற்கடித்தார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருமயம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக சட்டத்துறை (சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்) அமைச்சசராக பதவியேற்றார்.[3]