புதுக்கோட்டை மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் புதுக்கோட்டை நகராட்சி வரலாறு 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். நாட்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தனி சமஸ்தானமாக புதுக்கோட்டை விளங்கியது. கடந்த 1912-ம் ஆண்டு அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை நகராட்சி உருவானது. தொடக்கத்தில் மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்தது. பின்னர் நாடு சுதந்திரம் பெற்ற பின் புதுக்கோட்டை சமஸ்தானம் இணைக்கப்பட்டது.[1] இந்தநிலையில் நகராட்சி நிர்வாகம் புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியாக தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது [2]. அதன்படி புதுக்கோட்டை மாநகராட்சியில் நகராட்சியோடு இணைக்கப்படும் ஊராட்சி பகுதிகள் வாசவாசல், முல்லூர், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, 9ஏ நத்தம்பண்ணை, 9பி நத்தம்பண்ணை ஆகிய எட்டு ஊராட்சிகள் முழுமையாகவும் தேக்காட்டூர் ஊராட்சியில் 1,2,3 வார்டுகளும், திருவேங்கை வாசலில் 3,4 வார்டுகளும், வெள்ளனூரில் 7,8,9 வார்டுகளும் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் புதுக்கோட்டை நகராட்சி 2.16 லட்சம் மக்கள் தொகையும் 121 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக விரிவடைகிறது.[3] மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூபாய் 64.21 கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. [4]

புதுக்கோட்டை மாநகராட்சியை இயக்கும் காரணிகள்[தொகு]

 • மக்கள் தொகை வளர்ச்சி.
 • சராசரி ஆண்டு வருமான அதிகரிப்பு.
 • சாலைகளை மேம்படுத்துதல்.
 • குடிநீர் வழங்குதல்.
 • கழிவு மேலாண்மை.
 • கழிவுநீர் இணைப்பு வழங்குதல்.
 • தொழில்துறை அமைப்புகளை நிறுவுதல்.


 1. "அரசு அறிவிப்பு". தினத்தந்தி. தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/action-to-upgrade-pudukottai-municipality-to-municipal-corporation-931704. பார்த்த நாள்: 8 April 2024. 
 2. "அரசின் புதிய அறிவிப்பு". இந்து தமிழ். இந்து தமிழ். https://www.hindutamil.in/news/tamilnadu/1215740-4-new-municipal-corporations-for-tn.html. பார்த்த நாள்: 3 April 2024. 
 3. "அரசு அறிவிப்பு". https://www.hindutamil.in/news/tamilnadu/1216214-4-corporation-to-rise-soon-cm-stalin-orders-to-start-proceedings.html. பார்த்த நாள்: 10 April 2024. 
 4. "தமிழக அரசின் அரசாணை செய்திகள்". தினகரன். தினகரன். 15 March 2024. https://www.dinakaran.com/pudukottai_namakkal_tiruvannamalai_karaikudi_4municipalities_municipalcorporation_upgradation_m-k-stalin/. பார்த்த நாள்: 3 April 2024.