மலையடிப்பட்டி குடைவரைக் கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையடிப்பட்டி குடைவரைக் கோயில்கள், தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்தில் உள்ளது. அனந்தபத்ம சுவாமிக்கு அமைக்கப்பட்ட இக்குடைவரைக் கோயில், புதுக்கோட்டை நகரத்திற்கு வடக்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிபி 9-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இக்குடைவரைக் கோயில், கிபி 16-ஆம் வரை விரிவாக்கப்பட்டது.

இங்குள்ள இரண்டு குடைவரைக் கோயில்களில் ஒன்று அனந்தபத்மசுவாமிக்கும், மற்றொன்று சிவனுக்கும் உரியதாகும்.[1]இக்கோயிலின் மூலவர் அனந்தபத்மசுவாமி, தாயார் கமலவள்ளி நாச்ச்சியார் ஆவார்.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

திருச்சி - கீரனூர் - கிள்ளுக்குடி வழியாக 17 கிமீ தொலைவிலும், மற்றொரு பாதையான திருச்சி - துவாக்குடி - பொய்யாக்குடி - அசூர் - செங்கலூர் வழியாகவும் செல்லலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Malayadipatti Rockcut Temples

வெளி இணைப்புகள்[தொகு]