பொன்னமராவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொன்னமராவதி
பொன்னமராவதி
இருப்பிடம்: பொன்னமராவதி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°16′44″N 78°32′23″E / 10.278775°N 78.539715°E / 10.278775; 78.539715ஆள்கூற்று: 10°16′44″N 78°32′23″E / 10.278775°N 78.539715°E / 10.278775; 78.539715
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 11 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


பொன்னமராவதி (ஆங்கிலம்:Ponnamaravathi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொன்னமராவதி வட்டத்திலுள்ள பேரூராட்சி ஆகும் [3][4].

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,710 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பொன்னமராவதி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பொன்னமராவதி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

புவியியல்[தொகு]

பொன்னமராவதி தாலுகாவின் மேற்கில் எஸ். புதூர், சிங்கம்புணரி மற்றும் கொட்டாம்பட்டி தாலுகாக்களும், தெற்கில் திருப்பத்தூர் தாலுகாவும் அமைந்துள்ளன. புதுக்கோட்டை, நத்தம், காரைக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய நகரங்கள் பொன்னமராவதிக்கு அருகில் அமைந்துள்ளன. இது புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.

காலநிலை

கோடையில் இதன் வெப்பநிலை 30 °C முதல் 42 °C வரை ஆகும். ஜனவரி முதல் மே வரையிலான சராசரி வெப்பநிலை முறையே 27 °C, 27 °C, 30 °C, 33 °C மற்றும் 34 °C ஆகும்.

பிரசித்திபெற்ற இடங்கள்[தொகு]

திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னமராவதி அருகில் உள்ள வேந்தன்பட்டி,தேனீமலை, குமாரபட்டி போன்ற ஊர்களில் வருடாந்திரம் தை மாதத்தில்ஏறுதழுவல்(ஜல்லிக்கட்டு) நடைபெறுவது வழக்கம்.இவ்விழாவினை காண மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து மக்கள் இங்கு வருகிறார்கள்.புதுக்கோட்டையிலிருந்து 30கி.மீ தொலைவிலும்,திருமயத்திலிருந்து 24கி.மீ தொலைவிலும் வேந்தன்பட்டி உள்ளது. கட்டபொம்மு,ஊமைத்துரை தங்கியிருந்த ஊர் வேந்தன்பட்டி அருகில் உள்ள குமாரபட்டியாக மருவிய குமாரமங்கலம்

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=22&tlkname=Ponnamaravati&region=4&lvl=block&size=1200
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=22&centcode=0010&tlkname=Ponnamaravathi#MAP
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னமராவதி&oldid=2671260" இருந்து மீள்விக்கப்பட்டது