விராலிமலை

ஆள்கூறுகள்: 10°36′6″N 78°32′47″E / 10.60167°N 78.54639°E / 10.60167; 78.54639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விராலிமலை முருகன் கோயில்
விராலிமலை முருகன் கோயில்
விராலிமலை
—  கணக்கெடுப்பில் உள்ள ஊர்  —
விராலிமலை
இருப்பிடம்: விராலிமலை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°36′6″N 78°32′47″E / 10.60167°N 78.54639°E / 10.60167; 78.54639
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
அருகாமை நகரம் திருச்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி கரூர்
மக்களவை உறுப்பினர்

ஜோதிமணி

சட்டமன்றத் தொகுதி விராலிமலை
சட்டமன்ற உறுப்பினர்

சி. விஜயபாஸ்கர் (அதிமுக)

மக்கள் தொகை 10,883 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


137 மீட்டர்கள் (449 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.viralimalai.com


விராலிமலை (Viralimalai) தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இது திருச்சியிலிருந்து தெற்கே 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 2,759 வீடுகளும், 10,883 மக்கள் தொகையும் கொண்டது.[3] விராலிமலை குன்றின் உச்சியில் விராலிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோவில் பரத நாட்டியக் கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர். இவ்வூரானது கரூர் மக்களவைத் தொகுதிக்கும் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 2,759 வீடுகள் கொண்ட கணக்கெடுப்பில் உள்ள ஊரான விராலிமலையின் மக்கள் தொகை 10,883 ஆகும். அதில் ஆண்கள் 5,483 மற்றும் 5,400 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 985 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.32% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.72% ஆகவுள்ளது.[4]

வரலாறு[தொகு]

குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொடும்பாளூரின் தாக்கம் இங்கும் இருந்திருக்கலாம். சோழர் கால கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் வளமிக்க ஊராக இருந்திருக்க வேண்டும் என சாற்றுகிறது.[5] இங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன.

விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையான குறவஞ்சி நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும்.[6]

மயில் உய்வகம்[தொகு]

இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. விராலிமலை முருகன் கோவிலைச் சுற்றியும் சுற்றியுள்ள மலைக் காடுகளிலும் இவை காணப்படுகின்றன. இம்மலைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[7] இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Viralimalai Population Census 2011
  4. Viralimalai Town Population Census 2011
  5. Pudukkottai District#Pandya empire
  6. Sundarsuman center for Arts and Culture, Pudukkottai More details on Viralimalai பரணிடப்பட்டது 2008-12-04 at the வந்தவழி இயந்திரம்
  7. Services International, Viralimalai Sanctuary Viralimalai Sanctuary[தொடர்பிழந்த இணைப்பு]
  8. Rural Development and Panchayat Raj (PR.2) Department, G.O. (Ms) No.19, Dated: 23.1.2008 Declaring Viralimalai as a heritage place
"https://ta.wikipedia.org/w/index.php?title=விராலிமலை&oldid=3661239" இலிருந்து மீள்விக்கப்பட்டது