அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. அறந்தாங்கி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அறந்தாங்கியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,46,748 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 15,647 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 146 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஐம்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]
விஜயபுரம் • வெட்டிவயல் • வேம்பங்குடி கிழக்கு • வேம்பங்குடி மேற்கு • வல்லவாரி • தொழுவன்காடு • திருநாளூர் • தாந்தாணி • சுனையக்காடு • சுப்பிரமணியபுரம் • சிட்டங்காடு • சிலட்டூர் • ரெத்தினக்கோட்டை • இராமசாமிபுரம் • இராஜேந்திரபுரம் • பூவற்றக்குடி • பெருங்காடு • பெரியாளூர் • பரவாக்கோட்டை • பஞ்சாத்தி • ஊர்வணி • நெய்வத்தளி • நாட்டுமங்களம் • நற்பவளக்குடி • நாகுடி • மூக்குடி • மேற்பனைக்காடு • மேல்மங்களம் • மேலப்பட்டு • மறமடக்கி • மன்னகுடி • மாங்குடி • மங்களநாடு • குரும்பூர் • குளத்தூர் • கோங்குடி • கொடிவயல் • கீழ்குடி அம்மன் ஜாக்கி • கம்மங்காடு • ஏகப்பெருமாளூர் • ஏகணிவயல் • இடையார் • ஆயிங்குடி • ஆவணத்தான்கோட்டை • அத்தாணி • அரசர்குளம் வடபாதி • அரசர்குளம் தென்பாதி • அரசர்குளம் கீழ்பாதி • அமரசிம்மேந்திரபுரம் • ஆமாஞ்சி • அழியாநிலை • ஆளப்பிறந்தான்
வெளி இணைப்புகள்[தொகு]
- புதுக்கோட்டை மாவட்ட 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்